தேசிய வீரர்கள் அறிவிக்கும் நிகழ்வு - முஸ்லிம்கள் தொப்பி அணிந்து வரத் தடை

இக்பால் அலி-

நாட்டுக்காக போராடிய வீரார்களின் தேசத்துரோக பிரகடனத்தை இல்லாமலாக்கி அவர்களை தேசிய வீரர்களாக அறிவிப்புச் செய்யும் தேசிய வைபவம் எதிர்வரும் மார்ச் 30ம் திகதி கண்டியிலுள்ள ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற நேற்றைய கலந்துரையாடலில் தீர்மானம் மேற்கொள்ளபட்டுள்ளன.

மேலும் மேற்படி தேசிய வைபத்தில் சிங்கள மற்றும் தமிழ் , முஸ்லிம் ஆகிய இனத்தவர்களையும் உள்வாங்கும் வகையில் 2 ஆயிரம் இருக்கைகளுக்கு ஏற்பாடு செய்யும்படியான தீர்மானமொன்று மேற்கொண்ட அதேவேளை குறித்த தேசிய வைபவம் ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தினுள் இடம்பெறுவதையடுத்து, குறிப்பாக வைபவத்திற்கு வரும் முஸ்லீம் ஆண்கள் தலையில் தொப்பி அணிந்து வருவதை தவிர்த்துக் கொள்ளும் படியான தீர்மானமொன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி தேசிய வைபவம் தொடர்பிலான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் நேற்று (13) காலை ஸ்ரீ தலதா மாளிகை கூட்ட மண்டபத்தில் கண்டி மாவட்ட செயலாளார் எச்.எம்.பி. ஹிட்டி சேகர தலைமையில் இடம் பெற்றது. ஊடகத்தறை அமைச்சர் ஜயந்த கருணாதிலக்க , கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினாளூ லகீ ஜயவாளூத்தன, மத்திய மாகாண ஆளுனாளூ நிலுக்கா ஏக்க நாயக்க, தகவல் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர்ளூநாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய, மாநகர ஆணையாளர் திரு. தென்னகோன் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சு , தலதா மாளிகை, பொலிஸ் திணைக்களம் ஆகிய அமைப்புகளினது பிரதி நிதிகள் உட்பட கண்டி மாவட்டத்திலுள்ள அனைத்து திணைக்கள உயாளூ அதிகாரிகள் ஆகியோர்களும் நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

கடந்த 1804ம் ஆண்டளவில் வெளளூளைக்கார பிரித்தானிய அரசினால் தேசதுரேகிகள் என பிரகடனம் செய்யப்பட்ட 190 பேரையும் தேசிய வீராளூகளாக அறிவிப்புச் செய்யும் வகையிலும் மற்றும் கடந்த 1818ம் ஆண்டுக்காலப்பகுதியில் இவ்வாறு ஊவா வெல்லஸ்ஸ பிரதேசத்தில் கிளார்ச்சி செய்த 19 சிங்களத் தலைவார்கள் நாட்டுக்கு போராடிய சிங்கள தேசிய வீரர்களென ஜனாதிபதி மூலம் வார்த்தமான பத்திரிகையில் அறிவிப்புச் செய்யப்பட்டிந்தமை தொடார்பாக ஊடகத்தறை அமைச்சர் ஜயந்த கருணாதிலக்க தமது ஆரம்ப உரையில் தெரிவித்திருந்தார்.

தொடார்ந்து அங்கு அமைச்சரின் உரையில் கூறும் பொழுது :-

மேலும் இவ்வாறு தேச துரோகம் என பட்டம் சூட்டப்பட்டிருப்பதாகக் கூறும் மேலும் பலர் இருப்பதாகவும் அவார்களுல் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகத்தைச் சோளூந்தவாளூகளும் அடங்குகின்றனாளூ. ஆகவே இவர்கள் பற்றி விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி அவ்வாரான அனைவரையும் நாம் தேச வீராளூகளாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் விசேடமாக முதன் முதலாக ஜனாதிபதியின் ஆலோசனையின் படி தலதாமாளிகாவிலே இந்த உற்சவத்தை எடுப்பதன் காரணமாக அஸ்கிரிய பீடத்தின் நாயக்கர் தேரர் மற்றும் மல்வத்த பீடத்தின் நாயக்கர் தேரர் ஆகியவர்களின் முன்நிலையில் அவர்களுடைய ஆலோசனை ஆசீர்வாதத்துடன் மேற்கொள்வதற்கு விசேட அனுமதியைப் பெற்றுள்ளோம் அமைச்சர் அமைச்சர் அங்கு மேலும் கூறினார். அடுத்த கலந்துரையாடல் எதிhளூவரும் 22ம் திகதி புதன் கிழமை இடம்பெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -