அதற்கு நேற்று திருகோணமலை பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற ஒரு சம்பவம் சான்று பகர்கின்றது.
சிகிச்சை பெற்று வீடு திரும்பும் நிலையில் இருந்த ஒரு பெண் நோயாளியை கூட்டிச் செல்ல (வைத்தியரால் பாரமான எதுவும் தூக்கக் கூடாது என்றும் எச்சரித்த ஒரு நோயாளி) காத்திருந்த இருவருக்கு அங்கிருந்த பெண் காவலாளி மரியாதை குறைவான வார்த்தைப் பிரயோகத்தால் இதில் நிற்க வேண்டாம் போகும்படி சத்தமிட்டுள்ளார்.
அப்போது தாங்கள் நிற்பதற்கு ஞாயமான காரணத்தைச் சுட்டிக்காட்டியும் அனுமதி வழங்கப்படவில்லை, திரும்பிச்சொல்லும் போது லிப்டில் இருந்த ஒரு காவலாளியினாலும் உங்கள் தொல்லை தாங்க முடியவில்லை என்றும் நச்சரித்துள்ளார் அதில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் உச்சத்தை அடையவே ஒரு தங்கையுடன் வந்திருந்த அண்ணனுக்கு முன்னால் வேண்டத்தாகாத வார்த்தைப் பிரயோகங்களை பாவித்தது மட்டுமில்லாமல் ரவுடிகளின் பாங்கில் அடிடா பார்க்கலாம் என்று தூசன வார்த்தைகளை அள்ளிவீசியுள்ளார் அக்காவலாளி.
தான் அவ்விடத்தில் நின்றால் தன் கோபம் எல்லைமீறும் பட்சத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடலாம் என்று அப்பொதுமகன் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றுள்ளாளார் போகும் போது நான் போகிறேன் தனது மனைவியான அந்நோயாளியை கூட்டிவரும்படி தன் தங்கைக்கு கூறியும் சென்றுள்ளார் , போன பிறகு அவ்விடத்தில் நின்ற அவ் யுவதியின் கையை பிடித்து நீதான் அவருடன் வந்தது என்று கூறி இழுத்து தூசன வார்த்தைகளை பாவித்துள்ளார்.
மேலும் ஒருபடி மேலே சென்று இவர் தன்னைத் தாக்கியதாக கூறி வைத்தியசாலை பொலிசாரிடமும் முறையிட்டு வைச்சியசாலையில் போய்ப் படுத்துள்ளார்.பின்னர் இவ்யுவதியை துறைமுக பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். பொலிஸ் நிலையத்திற்கு படையெடுத்துவந்த வைத்தியசால ஊழியர் பொறுப்பதிகாரி , காவலாளிகளின் பொறுப்பதிகாரின் முன்னால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்ன பிர்ச்சினை என்று கேட்பதற்கு முன்னால் உங்கள் காவலாளிகள் சரியான முறையில் நடந்துகொள்வதில்லை நாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களை பாவிப்பதில்லை என்றும் தான் கடந்த வாரம் சிவிலில் வைத்தியசாலை சென்றிருந்த போது பலயங் பலயங் என்று விரட்டியதாகவும் தன்னோடு வந்திருந்த ஒருவரால் இவர் ஒரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்று கூறியதும் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் என்ற சம்பவத்தை கூறியுள்ளார்.
பொது வைத்தியசாலை என்பது பொது மக்களின் வைத்திய சேவைகளை வழங்கும் ஒரு சேவைநிலையம் அங்கு வருபவர்கள் பலதரப்பட்ட மன நிலையில் வரக்கூடிய இடம் அவ்விடத்தில் சேவை செய்யும் பலர் மனிதாபிமான முறையில் நடந்துகொண்டாலும் ஒரு சிலரின் குறுகிய மனநிலை பல அசௌகரியங்களை ஏற்படுத்திவிகிறது. அதில் தகுதியற்றவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுதல், சரியான பயிற்சிகள் வழங்கப்படாமை போன்றவைகளே பிரதான காரணிகளாகும். இப்படியான நிலைமைகளைத் தடுக்க வைத்தியசாலை நிர்வாகம் அவசரமாக பல வழிமுறைகளை கொண்டுவர வேண்டும் , தகுதியற்றவர்கள் நீக்கப்பட்டு தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது பொதுமகனாகிய எனது வேண்டுகோள்.