இருவருடங்களின் பின்னர் கண்விழித்த சுபைரின் நிலமை பரிதாபமானது என்கிறார் ஏறாவூர் நகர சபை முன்னாள் உறுப்பினர் முஸ்தபா ராசிக்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சுபைர் ஹாஜியார் அவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் 3 மில்லியன் பணம் கொடுத்து தனக்கு ஆதரவு வழங்குமாறு அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதாக அறிக்கை ஒன்றினைப் பார்வையிடக்கிடைத்தது.
நான் சுபைர் ஹாஜியாரிடம் கேட்கவிரும்புவது உங்களை முதலமைச்சர் தொலைபேசியில் அழைத்து 30 இலட்சம் பணம் தருவதாக குற்றம் சுமத்த இரண்டு வருடங்கள் எடுத்ததன் மர்மம்தான் என்ன.? என்று ஏறாவூர் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் முஸ்தபா ராசிக் கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்று ஏறாவூர் காரியாலத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதுமுஸ்தபா ராசிக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்:

30 இலட்சம் பணம் தனக்கு சும்மா கிடைப்பதை விரும்பவில்லை என்று கூறியுள்ள இந்த மாகாணசபை உறுப்பினர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு கொடுப்பதற்காக கிடைத்த நியமனங்களை பல இலட்சங்களுக்கு விற்பனை செய்ததனை எந்தப் பட்டியலில் போடுவது என கேட்க விரும்புகிறேன்.
இந்த மாகாணசபை உறுப்பினர் வேலைக்காக 57 இலட்சம் பணம் இந்து மத குருக்களை ஏமாற்றிப் பெற்றதும் அதற்காக அவரின் கூட இருந்த தோழர் ஆதாரத்துக்கு கடிதம் கொடுத்தமையும் நீதின்மன்றத் தீர்ப்பின் மூலம் தெளிவாக என்னிடம் உள்ளது. அப்படியிருக்க முதலமைச்சர் தனக்கு 30 இலட்சம் தருகிறேன் ஆதரவளிக்கவும் என்று குறிப்பிட்டவர் ஏனைய உறுப்பினர்களையும் அவ்வாறே அழைத்தார் என்று ஏனைய உறுப்பினர்களை கொச்சைப் படுத்தியிருப்பது இந்த மாகாணசபை உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். அரச நியமனங்களை தவிக்கின்ற ஏழை எளிய மக்களுக்கு ஏலத்தில் விற்றவர்களைப்போல் முதலமைச்சர் செயற்படவில்லை.

இத்தனை காலம் காத்திருந்த மாகாண சபை உறுப்பினர் சுபைரினால் எதும் செய்ய முடியவில்லை. இனியும் தன்னை மக்கள் ஆதரிக்க தயார் இல்லை என்று நன்றாகப் புரிந்து கொண்டதன் காரணமாக இப்படியொரு பழியொன்றினை சுமத்தியுள்ளமை கண்டிக்கத் தக்கதும் பரிதாபமானதுமாகத் தோன்றுகிறது. மூவாயிரம் ரூபாய்க்கே பாய்ந்து செல்லும் இவர்கள் இப்படியான பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்களை திசை திருப்பலாம் என்று பகல் கனவு காண்பது அவர்களின் வங்குரோத்து அரசியலை தெளிவாகக் காட்டுகிறது என்று தெரிவித்தார். கடந்த பல தேர்தல்களின் போதெல்லாம் கோடிக்கணக்கான ரூபாய்களை தனது பிரதான அரசியல் வாதிகளிடமிருந்து சுருட்டிக்கொண்டவர்கள்தான் இவ்வாறான கதைகளை அளக்க முற்படுகிறார்கள். அரசியலினால் கொழும்பில் வீடுகளோ, உறுகாமத்தில் மாட்டுப் பட்டிகளோ, படோடோபமான வாழ்க்கை முறைகளையோ ஏற்படுத்திக் கொண்டவர்கள்தான் இன்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

கடந்த மாகாண சபையில் சில காலம் சுகாதார அமைச்சராக இருந்த நீங்கள் உங்கள் சொந்த மண்ணுக்கு எதனைச் செய்தீர்கள் ? இன்று முதலமைச்சர் மாகாண சபைக்கு வந்து எத்தனை கோடி ரூபாய்க்களின் சேவைகளைக் கொண்டு கொட்டியிருக்கிறார். இதனைப் பாராட்டி முதலமைச்சருடன் கைகோர்த்து இன்னும் பல சேவைகளைச் செய்ய ஒன்றாகச் செல்ல வேண்டிய இக்காலத்தின் பொய்யான அறிக்கைகளை விட்டு செய்யவிருக்கும் சேவைகளைத் தடுக்கலாம் என்று நினைப்பது பெரும் முட்டாள்தனம் என்றும் தெரிவித்தார்.

சுபைர் அவர்கள் அரசியலில் சிறுபிள்ளையாகும். தனக்கென்று ஒரு ஆதரவுத்தளம் கூட வைத்திருக்கமுடியாதவர். ஏனைய அரசியல்வாதிகளின் எடுபிடியாகவும், ஏவலாளியாகவும், முகவராகவும் இருந்து அரசியல் செய்யும் இவருக்கு முதலமைச்சரைப் பற்றிப்பேச எவ்வித அருகதையும் இல்லை. அரசியலில் அவரைக்கொண்டுவந்து மாகாணசபை உறுப்பினராக, மாகாண அமைச்சராக ஆக்கிய பிரதியமைச்சர் அமீரளிக்கே துரோகம் இழைத்தவர். மற்றவர்களுக்கு துரோகம் இழைக்க எவ்வளவு நேரம் எடுக்கும் ? கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முன்பே தனக்கு அரசியல் முகவரியைப் பெற்றுத் தந்த அமைச்சர் அமீரலியையும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவரான ரிஷாத் பதியுதீனையும் காட்டிக்கொடுத்துவிட்டு ஈரான் போய் ஒளித்துக்கொண்டவர்தான் இந்த சுபைர். தன்னோடு விசுவாசமாக இருந்தவர்களுக்கே இவ்வளவு துரோகம் என்றால் இவர் யாரோடு உண்மையாளராக இருக்கப்போகிறார் ? பொய்யும் புரட்டும் ஏமாற்றுமே இவரின் அரசியலில் மேலோங்கியவையாகும்.

இவ்வாறான மடத்தனமானவர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிப்பதையே கேவலமாக நினைக்கின்றேன் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -