நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
மலையக மக்கள் முன்னனியானது எதிர்காலத்தில் உத்வேகத்துடன் பயணிக்கும் வகையில் முன்னனியின் ஸ்தாபக தலைவர் பெரிசாமி சந்திரசேகரனின் புதல்வி அனுசா சந்திரசேகரனின் அரசியல் பிரவேசம் எமக்கு மேலும் வலு சேர்ப்பதாக முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமாகிய வே.இராதாகிருஸ்னன் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னனியின் பேராளர் மநாடு அட்டன் கிருஸ்னபவான் கலாசாரமண்டபத்தில் இடம்பெற்றபோது தலைமையேற்று உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
பேராளர் மாநாட்டில் எதிர்வரும் இரண்டு வருடத்திற்கான மலையக மக்கள் முன்னனி மற்றும் மலையக தொழிலாளர் முன்னனியின் நிர்வாக பொருப்பாளர்கள் பதவியும் தெரிவு செய்யப்பட்டது இதன்போது தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் அமரர் சந்ணிதிரசேகரனின் கொள்கையை பின்பற்றி செயல்படும் மலையக மக்கள் முன்னனிக்கு தொடர்ந்தும் தலைவராக என்னை தெரிவு செய்யதமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு முன்னனியின் பிரதிச்செயலாளராக அமரர் பெ.சந்திரசேகரனின் புதல்வி அனுசா சந்திரசேகரன் தெரிவாகியுள்ளமை மகிழ்ச்சி.
அனுசா சந்திரசேகரன் தனது தாயாரின் கடமைகளை ஏற்று தந்தையின் பணியினை முன்கொண்டு செல்வார். அத்தோடு முன்னனியை பலமான அமைப்பாக உறுவாக்கும் தேவை தற்போது எமக்கு உண்டு. அந்தவகையில் கட்சியின் பழமையான உறுப்பினர்கள் புதிய உறுப்பினகளையும் இணைத்துக்கொண்டு ரத்தினபுரி பதுளை நுவரெலியா கொழும்பு பகுதிகளிலும் அங்கத்தவர்களை இணைத்துகொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இன்றை மாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தின் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு பதவி வகிக்க முடியும் அதேபோல எதிர்வரும் ஜனவரி மாதம் இருதியில் தாம் மேற்கொண்ட சேவை தொடர்பில் எமக்கு அறிக்கை வெளியிட வேண்டும் அதன்போது சேவையில் திருப்தியளிக்கா நிலையில் நான் உட்பட பதவியிலிருக்கு யாராயினும் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுவார். கிடைத்துள்ள பதவினை மக்களுக்காகவும் முன்னனியின் வளர்ச்சிக்காககவும் பயண்படுத்தவேண்டும் என்றார் நிகழ்வில் மலையக மக்கள் முன்னனியின் உயர்மட்ட உறுப்பினர்கள் தோட்ட கமிட்டிகள் மாவட்ட தலைவர்கள் தலைவிகள் என பலர் கலந்துகொண்டனர்.