மத்ரஸாக்களுக்கு பொதுவான பாடத்திட்டம்! தேவையான உதவிகளை வழங்கத் தயார் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

நிந்தவூர் நிருபர்-அப்துல் கபூர்-

த்ரஸா மாணவர்களுக்கு பொதுவான பாடத்திட்டம் மற்றும் பரீட்சை என்பன நடத்தப்பட வேண்டும் என நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கையை பூர்த்தி செய்ய முஸ்லிம் சமய விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்கத்தக்க செயலாகும் எனத்தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்இ இந்த முயற்சிக்குத் தேவையான உதவிகளை வழங்கத்; தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளைஇ பொதுவான பாடத்திட்டம் மற்றும் பரீட்சை என்பன எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கருத்துக்களையும் - ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளவது சிறப்பாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-

இலங்கையில் இயங்கி வருகின்ற மத்ரஸாக்களுக்கு பொதுவான பாடத்திட்டங்களோஇ பரீட்சைகளோ இல்லை. தத்தமது கொள்கைகளுக்கு அமைவாக ஒவ்வொரு மத்ரஸாக்களும் இயங்கி வருகின்றன. இது சில சமூகப் பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளதாக சுட்டிக்காட்டி அனைத்து மத்ரஸாக்களுக்கும் பொதுவான பாடத்திட்டமொன்று அறிமுகப்படுத்த வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தன.

அந்தவகையில் நானும் பல சந்தர்ப்பங்களில் இந்தக் கோரிக்கையை அமைச்சர் ஹலீமிடம் முன்வைத்திருந்தேன். கடந்த வரவு செலவு திட்டத்தில் முஸ்லிம் சமய விவகார அமைச்சு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதும் நான் இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தேன். அதுமட்டுமல்லாமல்இ கடந்த வருடம் மே மாதம் 4ஆம் திகதி நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் அமைச்சர் ஹலீமுக்கும் எனக்கும் இது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்றும் நடைபெற்றது.

அவர் அப்போது எம்மிடம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இன்று நடவடிக்கை எடுத்துள்ளமை பாராட்டத்தக்கது. இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் வழங்கத் தயாராகவுள்ளோம். – என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -