நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு




எம்.எம்.ஜபீர்-

லெமென் ஹாவெஸ்ட் என்ரபிறசஸ் நிறுவனத்தின் கல்வி மேம்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 180 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பாடசலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தின் அதிபர் வை.எல்.ஏ.வஸீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் லெமென் ஹாவெஸ்ட் என்ரபிறசஸ் நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் எம்.ஐ.இப்றாகீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கற்றல் உபகரணங்களை மாணவர்களிடம் வழங்கி வைத்தார்.

இதன்போது கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆரம்ப கல்விப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் வை.எல்.கே.தாஸீம், லெமென் ஹாவெஸ்ட் என்ரபிறசஸ் நிறுவனத்தின் பணிப்பளார் ஐ.எம்.நிப்றாஸ், லெமென் ஹாவெஸ்ட் என்ரபிறசஸ் நிறுவனத்தின் முகாமையாளர் ஏ.ஆர்.எம். நஸீர், லெமென் ஹாவெஸ்ட் என்ரபிறசஸ் நிறுவனத்தின கணக்காளர் ஜே.எம்..பாஸித், லெமென் ஹாவெஸ்ட் என்ரபிறசஸ் நிறுவனத்தின் நிர்வாக உத்தியோகத்தர் வீ.றுஸ்தி, கல்வி மேம்பாட்டுத் திட்ட பணிப்பாளர் ஐ.எம்.சப்றாஸ், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -