மன்னார் மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் நியமனத்தில் மாபெரும் குளறுபடி..?

ட வடமாகாண சபையினால் வெளியீடப்பட்ட தொண்டர்கள் ஆசிரியர்கள் நியமன பட்டியலில் பெரும் குளறுபடி இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. இன் அடிப்படியில் தொண்டராக கடமையாற்றாதோர்,பாடசாலை அதிபர்களின் மனைவி,மகள்,சகோதரன்/சகோதரி ஆகியோர் முறையற்ற விதத்தில் தொண்டர் ஆசிரியர்கள் பட்டியலில் உட்புகுத்தப்பட்டுள்ளார்கள்.

அநேகமானோர் ஒரு நாட் கூட தொண்டர் ஆசிரியராக கற்பிக்காமல் தங்கள் உறவுக்கார அதிபர்களின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதே போன்று முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரில் இயங்கும் பாடசாலை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் கூட பூர்த்தியாகாத நிலையில் சுமார் 5க்கு மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு,பெயர் பட்டியலில் கூட பெயர் வெளிவந்துள்ளதாக அறியமுடிகின்றது.

அத்துடன் இது தொடர்பில் கடந்த வாரம் கூட முசலி பிரதேச பாடசாலை அதிபர் ஒருவர் கூட மன்னார் கல்வி வலையத்தினால் விசாரணைக்குட்படுத்தபட்டார். என்று தெரியவருகின்றது. வன்னி மாவட்ட அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர், வடமாகாண முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் கனவத்தில் எடுத்து பாதிக்கப்பட்ட நபர்கள்களுக்கு தீர்வுகிடைக்க ஆவணம் செய்யுமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்கள். v.n
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -