நாங்கள் தேங்காய் துருவதற்கு பாராளுமன்றம் போகவில்லை - மனோ கணேஷன்

க.கிஷாந்தன்-
மது சமூகம் சுய மரியாதையுடன் இந்நாட்டில் வாழ வேண்டும் என்பதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும். கடந்த காலங்களில் உள்ள தலைவர்களை போல நாங்கள் தேங்காய் துருவ போகவில்லை. மக்களுக்காக பணிகளை முன்னெடுக்கவே பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவைக்கு சென்றறோம் என தேசிய சுகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4000 தனி வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கமைய 13.02.2017 அன்று திங்கட்கிழமை காலை நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவ பொகவனா தோட்டத்தில் அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்திடம் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்காளி கட்சியாகவே செயல்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் எமது மலையக மக்களின் பிரச்சினைகளை நன்கு ஆராய்ந்து உதவிகளை செய்து வருகின்றனர். இந்தவகையில் இந்திய அரசாங்கம் எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையை ஏற்று எமது மக்களின் அபிவிருத்திக்காகவும் நல்ல வாழ்க்கைக்காகவும் பல்வேது உதவிகளை செய்து வருகின்றனர்.

மலையகத்தில் நவீனமான நாகரீகமான வாழ்க்கையை வாழ வைக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயல்பாடு மூலம் 50,000 வீடுகள் கட்டியே தீருவோம். இதன் ஊடாக அனைத்து மலையக மக்களையும் சுய கௌரவமான வாழ்க்கையை வாழ வைப்போம். கடந்த காலங்களில் பாராளுமன்றம் சென்றவர்கள் மலையக மக்களின் உரிமைக்காக குரல் எழுப்புவது குறைவாகவே இருந்தது. இன்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக மக்களுடைய உரிமைக்காக குரல் எழுப்பி வருகின்றது.

கல்வி வளர்ச்சி எமது சமூகத்தின் சுயமான கௌரவமான வாழ்க்கையை உருவாக்கும் அதற்காக எமது அமைச்சர் இன்று பல்வேறு மட்டத்தில் குரல் எழுப்பி வருகின்றார். அதேபோன்று தனி வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்று நடக்க அமைச்சர் திகாம்பரம் பாடுபட்டு வருகின்றார். தொழில் வாய்ப்பு ஏனைய சேவைகள் தொடர்பில் அனைத்தும் நிறைவேற்றம் அடைந்து வருகின்றது. தமிழ் முற்போக்கு கூட்டணி இந்த அரசாங்கத்தில் பங்காளி கட்சியாக செயற்படுகின்றது. ஆகையால் அனைத்து தேவைகளும் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பேசுவது குறைவாக இருந்தாலும் சேவையை செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கை தமிழ் முற்போக்கு கூட்டணி நிறைவேற்றம் செய்து வருகின்றது. மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சுக்கு தகுந்த செயலாளர் அமைந்துள்ளார். அவரை பாராட்ட வேண்டும். பாராளுமன்றத்தில் உயரிய சபை ஒன்று இருக்கின்றது. அந்த சபைக்கு அமைச்சிகளின் செயலாளர்கள் ஒன்று கூடுவார்கள். அதன்போது மலையக மக்களின் மேம்பாட்டை உரிய முறையில் கவனிக்கப்பட வேண்டும் என சொல்லுவதற்கு இநடத செயலாளர் அமைந்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தில் ஊடாக இலங்கைக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது. இலங்கை நமக்கு தாய் நாடாக இருக்கும் பொழுது இந்தியா தந்தை நாடாக இருக்கின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான மக்களின் உறவு யாராலும் பிரிக்க முடியாதது. இலங்கையில் ஒரு அரசாங்கத்தை பாதுகாக்கும் வகையில் மலையக மக்கள் செயல்படுகின்றனர். அத்தோடு சக்தியாகவும் இருக்கின்றனர்.

இலங்கையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு இந்திய அரசாங்கம் செய்யும் உதவிகளை இந்நாட்டில் வாழ்கின்ற மலையக மக்கள் உள்ளிட்ட மூஸ்லீம் மக்களுக்கும் உதவிகள் சென்றடைய வேண்டும் என்பதை த.மு.கூட்டணி வழியுறுத்துகின்றது. நாம் இந்த நாட்டில் பின்தங்கியவர்களாக இருக்கின்ற போதிலும் முறையான உதவிகள் எமக்கு கிடைத்து அனைத்து மக்களை போல் நவீன நாகரீக ரீதியில் உரிமை பெற்ற மக்களாக வாழ வேண்டும் என்பதை த.மு.கூட்டணி வழியுறுத்துகின்றது. பிரதமர் மோடியிடம் நாம் வழியுறுத்தல் செய்ததற்கு அமைவாக இன்று இந்திய அரசாங்கம் மலையக மக்களின் வாழ்வின் எழுச்சிக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது என தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -