அட்டாளைச்சேனையில் வேலையில்லா பட்டதாரிகள் ஆா்ப்பாட்டம்..!

றிசாத் ஏ காதர்-
கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தங்களை அரச சேவைக்குள் உள்ளீர்ப்புச் செய்யக் கோரி கவனயீர்ப்பு நடவடிக்கையினை மாகாணத்தின் பல பகுதிகளிலும் மேற்கொண்டிருந்தனர். அந்தவகையில் அம்பாரை மவாட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் வேலையற்ற பட்டதாரிகளின் தமது கவனஈர்ப்பு நடவடிக்கையினை 2017.02.21ஆம் திகதி இன்று அட்டாளைச்சேனை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கு முன்னால் மேற்கொண்டிருந்தனர்.

இக்கவனயீர்ப்பு நடவடிக்கையில் அரச சேவைக்குள் தங்களை உள்வாங்கக்கோரி எட்டு அம்ச கோரிக்கைகளுடன், பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

குறித்த பதாகைகளில் 'அடிக்காதே, அடிக்காதே பட்டதாரிகளின் வயிற்றில் அடிக்காதே', மத்திய அரசே, மாகாண அரசே பட்டம் பெற்றும் பயனில்லை, வயதெல்லையை அதிகப்படுத்து , கிழக்குக்கு மட்டும் ஏன் இந்த பாராமுகம், வேண்டும் வேண்டும் தொழில் வேண்டும், வேண்டாம் வேண்டாம் பரீட்சை வேண்டாம் ,நல்லாட்சியிலாவது முடியுமா பாட்டதாரிகளின் போராட்டம் என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. 

கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்கும் பொருட்டு அண்மையில் போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டு, வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம் திருகோணமலையில் 2017.02.20ஆம் திகதி வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

மேலும், நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சையினை இரத்துச் செய்யுமாறும், வயதெல்லையை 45ஆக அதிகரிப்பதுடன், பட்டதாரிகளை நேர்முகப்பரீட்சை அடிப்படையில் தெரிவு செய்து நியமனங்களை வழங்குமாறு கோரியே இக்கவனஈர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -