கடும் பனி மூட்டத்துக்கு மத்தியில் பிரதான வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்த லொறிச் சாரதியொருவர், திடீரென வீதியில் ஒரு இராணுவ ஹெலிகொப்டர் தரையிறங்குவதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.
அவரது ஆச்சரியம் விலகுவதற்குள், ஹெலிகொப்டரில் இருந்து இறங்கி ஓடிவந்த விமானி, “அக்டோபே நகருக்கு எந்தப் பக்கமாகச் செல்ல வேண்டும்?” என்று கேட்டதும் லொறி சாரதி அதிர்ச்சியடைந்தார். வழி தெரியாததற்காக ஹெலிகொப்டரைத் தரையிறக்கி வழி கேட்கிறாரே என்று நினைத்தவாறே ஹெலிகொப்டர் செல்லவேண்டிய திசையை விமானிக்கு விளக்கினார்.
அதைக் கேட்டுக்கொண்ட விமானி, லொறிச் சாரதிக்கு நன்றி கூறிவிட்டு மீண்டும் ஹெலிகொப்டரில் ஏறிப் பறந்து சென்றார்.
இந்தக் காட்சியை, குறித்த லொறிக்குப் பின்னால் வந்த மற்றொரு லொறியின் சாரதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். (வீ)