இலங்கையர் என்ற உணர்வுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் - கிழக்கு மாகாண சமூகப் பொலிஸ் ஒருங்கிணைப்பாளர்

மது இனம் மதம் எதுவாக இருந்தாலும் அதேபோல் பல பல பிரிவுகளாக பிரிந்து வாழ்ந்தாலும் நாம் அனைவரும் இலங்கையர் என்ற உணர்வுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த உணர்வு தான் எங்கள் நாட்டுக்கு தற்போது தேவைப்படும் ஒன்றாகவுள்ளது என கிழக்கு மாகாணத்திற்கான சமூகப்பொலிஸ் ஒருங்கிணைப்பாளரான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.அரசரெட்ணம் தெரிவித்தார்.

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கருங்காலிச்சோலை கிருஸ்ணா வித்தியாலயத்தில் நிலையப் பொறுப்பதிகாரி சமன்குமார கீரகல்ல தலைமையில் நடைபெற்ற பொலிஸ் நடமாடும் சேவையின் போது மேற்படி நிகழ்வினை ஆரம்பித்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது

சட்டத்ததையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதென்றால் பொதுமக்களுடைய நல்லுறவு எம்முடன் பின்னிப்பிணைந்து காணப்படுதல் வேண்டும்.

அப்படி இருந்தால்தான் குற்றத்தை கூடியளவு தடுக்க கூடியதாக இருக்கும்.பொலிஸ் திணைக்களம் ஒரு முதன்மையான திணைக்களமாக இருப்பதற்கு பொது மக்களின் உறவு முக்கியமானதொன்றாக காணப்படுகிறது.

யுத்தம் ஏற்பட்ட காலத்தில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையேயான உறவு போதுமானதாக காணப்படவி;லலை.தற்போது பொலிசாரின் பக்கம் மக்களுடைய பார்வை திரும்பியுள்ளது.இந்த பார்வை தொடர்ந்;திருக்க வேண்டும்.

ஆகவே நீங்கள் எம்முடன் கைகோர்த்து இந்த நாட்டை நல்லதொரு நிலைக்கு கொண்டு செல்ல முன்வர வேண்டும்.இன மதம் பேதமற்று எல்லோரும் இத் திரு நாட்டின் மைந்தர்கள் என்ற உணர்வை சிறு பராயத்தில் இருந்து மக்கள் மத்தியில் விதைக்க வேண்டும் என்பதுதான் எங்களது அவாவாகும்.

அகவே எதிர்கால சந்ததியினருக்கு உங்கள் தாய்த்திருநாடு என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் நிலைத்திருக்கச் செய்யவேண்டும்.பொது மக்களினதும் பொலிசாரினதும் நல்லுறவு மேலும் மேலும் வளர வேண்டும்.என்ற நோக்கத்தில்தான் இவ்வாறான நிகழ்வுகளை பொலிஸ் நிலையங்கள் தோறும் நடாத்தி வருகின்றோம்.

ஏன் என்றால் ஒவ்வொரு பொலிஸ் நிலையமும் செல்லும் போது மக்கள் அவர்களது தேவை பூர்த்தி செய்யப்படவில்லை என்று கூறுகின்ற காரணத்தால் பொலிஸ்மா அதிபர் இது போன்ற நிகழ்வுகனை நடாத்தி மக்களுடைய மனங்களை வென்றெடுத்து பொலிசாருடன் நல்லுறவை ஏற்படுத்துவதன் காரணத்தால் நாங்கள் இது போன்ற நிகழ்வுகளைச் செய்கின்றோம்.

குற்றங்களை தடுப்பது எப்படி,? போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது எப்படி? விபத்துக்களை குறைப்பது எப்படி? என்பது பற்றிய பல விடயங்களை சிந்தித்து செயற்படுத்தி வருகின்றோம். என்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -