பம்பலப்பிடிய முஸ்லிம் மகளீர் வித்தியாலயத்தில் 10ம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியொருவர் பாடசாலையில் உள்ள பாலமொன்றில் இருந்து கடந்த புதன் கிழமை குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
பாடசாலையின் மாணவத் தலைவிகள் சிலர் திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் தனது மகளை அச்சறுத்தியுள்ளமையே தனது மகளின் இந்த விபரீத முடிவுக்கு காரணம் என அவரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாணவி கடந்த புதன் கிழமை பாடசாலையின் இரு கட்டிடங்களுக்கு இடையில் அமைந்துள்ள பாலத்தில் இருந்து குதித்துள்ள நிலையில் , குறித்த விபத்தில் அவரின் கை மற்றும் வலது காலின் விரலொன்றும் விலா எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாக களுபோவில போதனா மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்தனர்.