ஹசன் அலிக்கு வழங்கிய வாக்குறுதியை மீறியது கட்சிக்கு பலத்த சவால் - நாபீர்

ஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட்

ஓடியோ கட்டாரிலிருந்து அல்-ஹாஜ் நபீர்:- https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=O62wdQuAFmk

சமகாலத்தில் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தினுடைய பகிரங்கக் குற்றச்சாட்டுக்களினால் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமையான அப்துர் ரவூப் ஹிபத்துல் ஹக்கீமும் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சனையானது சிறீங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்சி சார்ந்த விடயமாக இருந்தாலும், நான் கட்சிக்கு வெளியிலிருந்து கொண்டு கட்சியின் நகர்வுகளை நோக்குகின்ற பொழுது, ஆரம்ப காலத்திலிருந்து இன்று இருக்கக்கூடிய உயர்பீட உறுப்பினர்களில் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃபினுடைய காலம் தொட்டு கட்சிக்காகவும், கட்சியின் விசுவாசத்திற்காகவும் முன்னாள் கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு பொருத்தமானவராகும். அதே நேரத்தில், சம்மாந்துறைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் கட்சியின் தவிசாளர் பதவிக்கு மிகப்பொருத்தமானவர் என ஸ்ரீ லங்கா நபீர் பௌண்டேசனின் இஸ்தாபகத்தலைவர் அல்-ஹாஜ் உதுமான் கண்டு நபீர் கட்டாரிலிருந்து தொலைபேசியினூடாகத் தெரிவித்தார்.

அதிலும் முக்கியமாக கடந்த வாரத்திற்கு முன்னர் இடம்பெற்ற சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் கட்சியின் தலைமை மீது குற்றஞ்சுமத்தியுள்ள தவிசாளர் பசீர் சேகுதாவூத் தவிசாளர் பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டதற்குப் பிற்பாடு, கட்சியில் வெற்றிடமாக இருக்கின்ற அதிகாரமிக்க முக்கிய பதவியான கட்சியின் தவிசாளர் பதவி சமபந்தமாக இன்று 12.02.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெறும் கட்சியின் பேராளர் மாநாட்டில் கட்சியின் தலைமையும் உயர்பீடமும் மிகச்சரியான முடிவெடுத்து, கட்சியின் மூத்த போராளியும் பாராளுமன்ற உறுப்பினருமான மன்சூருக்கு தவிசாளர் பதவி வழங்கப்படுவதே பொருத்தமான விடயமாகும். மு.கா விலிருந்து ஆரம்ப காலந்தொட்டு இன்று வரையும் கட்சிக்கு விசுவாசமாக கட்சிக்காக உழைத்து வரும் மூத்த போராளியான பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர், தற்போதைய நிலையில் கட்சிக்குள் இருப்பவர்களில் மிகவும் பொருத்தமானவராகும். தவிசாளர் பதவி என்பது கட்சிக்கான மிகவும் முக்கியமான பதவிகளில் ஒன்றாகும். ஆகவே, கட்சிக்காக பல்வேறு சந்தரப்பங்களில் பல வகையான இன்னல்களை அனுபவித்து, தன் உயிரையும் துச்சமாகக்கருதி முஸ்லிம்களுக்கும் மு.கா. கட்சியின் இருப்புக்கும் உழைத்தவர் என்ற வகையில், பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் தவிசாளர் பதவிக்கு மிகப்பொருத்தமானவராவார். 

ஆனால் சமூக வலைத்தளங்களில் பரவலாக கட்சியின் அடுத்த தவிசாளர் மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு கொடுக்கப்படலாம் என்ற செய்திகள் பிரசுரிக்கப்பட்டு வருவது சம்பந்தமான கேள்விக்குப் பதிலளித்த நபீர் பௌண்டேசனின் இஸ்தாபகத்தலைவர், அம்பாறை மாவட்டத்திலிருக்கக் கூடிய உயர் பீட உறுப்பினர்களில் மாகாண சபை உறுப்பினர்களில் ஒருவர் தான் தவம். அந்த வகையிலே எப்பொழுதும் தலைமைகள் தமக்கு விசுவாசமாக இருக்க கூடியவர்களை பதவிகளில் நியமிப்பது வழக்கமாக இருக்கின்றது. ஆனால், இந்த தலைமை என்பது உயர்பீடத்திலிருக்கின்ற எல்லோரையும் தன்னுடைய விசுவாசியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். விசுவாசம் இல்லாதவர்களை கட்சியில் வைத்துக்கொண்டு அரசியல் செய்வதென்பது ஜனநாயக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத விடயமகும். அந்த அடிப்படையில் சகோதரர் தவம் தலைவருக்கு விசுவாசமாக இருக்கின்றார் என்றால்? சகோதரர் மன்சூரும் தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். தலைமைத்துவம் என்று வருகின்ற பொழுது ஒவ்வொரு உறுப்பினர்களும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு விட்டுக்கொடுப்புடன் செயற்படுபவர்களாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையிலே சகோதரர் தவம் முஸ்லிம் காங்கிரசிற்குள் இடைக்காலத்தில் உள்வாங்கப்பட்டவர்.

ஆகவே, முஸ்லிம் காங்கிரசின் தலைமை தவத்திற்கு தவிசாளர் பதவி கொடுக்கின்ற விடயத்தில் அம்பாறை மாவட்டத்து முஸ்லிம் காங்கிரசின் ஒட்டு மொத்த ஆதரவாளர்களும் போராளிகளும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதே தன்னுடைய கருத்தாக இருக்கின்றது. மேலும், சகோதரர் தவம் கடந்த கால தேர்தலில் அக்கறைப்பற்றில் போதியளவு வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாமையானது நான் மேற் கூறிய விடயத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. கடந்த மாகாண சபைத்தேர்தலில் தவம் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தாலும், அது அமைச்சர் அதாவுல்லாஹ் மீது அதிருப்தியடைந்த வாக்களர்கள் முஸ்லிம் காங்கிரசிற்கு அளித்த வாக்குகளே தவிர, தவத்திற்கு கிடைத்த தனிப்பட்ட வாக்குகளாகப் பார்க்க முடியாது. ஆகவே, எதிர்வருகின்ற காலங்களில் அவர் மாகாண சபையில் அமர்வதென்பது கேள்விக்குறியான விடயமாகவே இருக்கின்றது. 

இந்நிலையில், முஸ்லிம் காங்கிரசினுடைய தலைமையும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. தலைமையானது, அம்பாறை மாவட்டத்தில் முன்பைப் போன்று ஏதாவது தேர்தலில் களமிறங்குமானால், தலைமை அம்பாறை மாவட்டத்திலிருந்து தகுந்த பாடத்தினைக் கற்றுக்கொள்ளும் என்பதில் மாற்றுக்கருத்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே, முஸ்லிம் காங்கிரசின் தலைமை தவிசாளர் பதவி விடயத்தில் நல்ல முடிவினைத்தான் எடுக்குமென்பது என்னுடைய கருத்தாக இருக்கின்றதென உதுமான் கண்டு நபீர் கட்டாரிலிருந்து தொலைபேசியினூடாக தனது கருத்துக்களைத் தெளிவுபடுத்தினார். மேலும், கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு நபீரினால் வழங்கப்பட்ட விரிவான பதிகள் அடங்கிய காணொளி எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -