வடக்கு – கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி என்பன அடையமுடியாத காரியமல்ல - ஆனந்த சங்கரி

ஆனந்த சங்கரி
டக்கு – கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி என்பன அடையமுடியாத காரியமல்ல எனத் தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆனந்த சங்கரி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் பேச்சுக்களிலும் அறிக்கைகளிலும் நடவடிக்கைகளிலும் ஏற்பட்ட சந்தேகமே அதனை எட்டமுடியாதிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் தரப்பினர் குறித்து சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகம் முற்றுமுழுதாக நீக்கப்படும் வரை எதுவும் செய்யமுடியாதென அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக அவர் இன்று (14) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென கூட்டமைப்பினர் பிரசாரம் செய்தமையே சமஷ்டியை சிங்கள மக்கள் எதிர்ப்பதற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், கிடைத்த சந்தர்ப்பத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தவறவிட்டு விட்டதாக ஆனந்த சங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு பொறுப்பற்றவர்களின் தவறான கையாள்கையாலும் பிழையான அணுகுமுறையாலும் தமிழ் மக்களின் உரிமைகளும், சலுகைகளும் வேகமாக அழிந்து வருவதால் அவற்றை பாதுகாப்பதற்கு இலங்கையிலும் பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டிய காலம் வந்துவிட்டதென குறிப்பிட்டுள்ள ஆனந்த சங்கரி, தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை நாடாளுமன்ற பதவியிலிருந்து நீக்குவதே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு காணப்படும் ஒரே வழியென மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -