யு ஆ கீத் திருகோணமலை-
திருகோணமலை உவர்மலை விவேகானந்தா பாடசாலையில் இன்று 225 வேலையில்லா பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் வைபவத்திற்கு வருகைதந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் உட்பட அதிகாரிகள் அனைவரையும் மண்டபத்திற்குள் செல்லவிடாது வழிமறித்து, பரீட்சையில் தேறி 40 வீதத்திற்கும் அதிகமான புள்ளிகள் கிடைத்தும் நேர்முக பரீட்சைக்கும் அழைக்கப்பட்ட 305 கிழக்குமாகாண வேலையில்லா பட்டதாரிகளில் 225 பேர்களுக்கு மட்டுமே நியமணம் வழங்கப்படுவதை கண்டித்து நியமணம் வழங்கப்படாத மீதமிருப்போர் காலை 8.00 மணிமுதல் 10.30 மணிவரைக்கும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.