எடின்பார்க் விருதுபெறும் சாய்ந்தமருது ஜெ.எம்.பாஸித் !

எம்.எம்.ஜபீர்-

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் மன்றத்தின் தேசிய இளைஞர் விருது தொடர்பு பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள பிரித்தானிய நாட்டின் 'எடின்பார்க்' பல்கலைக் கழகத்தினால் வழங்கப்படும் சர்வதேச விருதுத் திட்டத்தில் பிரேவு இளைஞர் கழகத்தின் தலைவர் ஜெ.எம்.பாஸித், சர்வதேச 'வெண்கல' விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவ்விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் 06ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 2.00 மணிக்கு கொழும்பிலுள்ள பிரதமர் வாசஸ்தலமான அலரி மாளிகையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது எடின்பார்க் பல்கலைக்கழக பிரதிநிதிகளால் இவருக்கான விருது வழங்கப்படவுள்ளது. இளைஞர் ஆளுமை, தலைமைத்துவம் மற்றும் சமூக அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக இவருக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

மேலும் இவர் சாய்ந்தமருது பிரேவு இளைஞர் கழகத்தின் தலைவரும் மற்றும் முன்னாள் இளைஞர் கழக சம்மேளனத்தின் உறுப்பினருமாவார். தேசிய ரீதியில் இடம்பெற்ற இளைஞர் மாநாடுகளில் மற்றும் பல்வேறு நிகழ்வில் பங்கேற்றவர்.

மேலும் இவர் லெமன் ஹார்வெஸ்ட் என்டர்பிரைஸஸ் நிறுவனத்தின் நிருவாக உத்தியோகஸ்த்தராக பணிப்புகின்றார். இவர் . சாய்ந்தமருது அல்-கமறூன் , கல்முனை ஸாஹிறாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் ஆவர்.

இவ் விருதினைப் பெற்றுத்தர பல தியாகத்தினையும்,அர்பனிப்பையும் புரிந்த முன்னாள் இளைஞர் பாராளுமன்ற பிரதியமைச்சர் ஏ.எல்.எம்..றிஸான் அவர்களுக்கும் பிரேவு இளைஞர் கழகம் சர்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -