காரைதீவு நிருபர் சகா-
உலக சைவத்திருச்சபையின் ஏற்பாட்டில் எதிர்வரும் மகாசிவராத்திரியை முன்னிட்டு நல்லூரிலிருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு ஆறுநாள் பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9மணியளவில் ஆரம்பமான இப்பாதயாத்திரை அன்று மாலை தனங்கிளப்பைச் சென்றடைந்தது.
திருச்சபையின் கிழக்குமாகாண இணைப்பாளரும் கதிர்காம பாதயாத்திரீகர் குழுத்தலைவருமான வேல்சாமி மகேஸ்வரன் அப்பாதயாத்திரைக்கு தலைமைதாங்குகின்றார். உலக சைவதிருச்சபையின் இலங்கைக்கான இணைப்பாளர் ஸ்ரீ சுமுகலிங்கம் ஏற்பாடு செயய்த இப்பாதயாத்திரையில் 30பேரளவில் கலந்துகொண்டுள்ளனர்.
ஆறுநாட்களின்பின்னர் 24ஆம் திகதி சிவராத்திரியன்று திருக்கேதீஸ்வரத்தை அடைந்து மகாசிவராத்திரி விரதம் அனுஸ்ட்டிக்கப்படுமென்று தெரிவித்தார்.