உலக சைவத்திருச்சபையின் ஏற்பாட்டில் எதிர்வரும் மகாசிவராத்திரியைமுன்னிட்டு நல்லூரிலிருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு ஆறுநாள் பாதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
திருச்சபையின் கிழக்குமாகாண இணைப்பாளரும் கதிர்காம பாதயாத்திரீகர் குழுத்தலைவருமான வேல்சாமி மகேஸ்வரன் அப்பாதயாத்திரைக்கு தலைமைதாங்குகின்றார்.
வெள்ளிக்கிழமை அதற்கான விசேட பூஜையும் வழிபாடும் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் நடைபெற்றது.
சந்நிதியிலிருந்து வெள்ளிக்கிழமை பூஜை முடிந்தகையோடு மாலை நல்லூருக்கான பாதயாத்திரை ஆரம்பமாகியது.
நல்லூரில் தங்கியிருந்து நாளை 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரி கந்தசுவாமி ஆலயத்திலிருந்து திருக்கேதீஸ்வரத்திற்கான ஆறுநாள் பாதயாத்திரை ஆரம்பமாகின்றது என உலக சைவதிருச்சபையின் இலங்கைக்கான இணைப்பாளர் ஸ்ரீ சுமுகலிங்கம் தெரிவித்தார்.
ஆறநாட்களின்பின்னர் சிவராத்திரியன்று திருக்கேதீஸ்வரத்தை அடைந்து மகாசிவராத்திரி விரதம் அனுஸ்ட்டிக்கப்படுமென்று தெரிவித்தார்.