ஜோர்டான் இலங்கை நட்புறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை - ஹரீஸ்


அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன்-

ந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கான ஜோர்டான் தூதுவர் ஹஸன் மஹ்மூத் முஹம்மட் அல் ஜவர்னேஃ மற்றும் இலங்கைக்கான ஜோர்டான் கொன்சலேட் ஜெனரல் அக்பர் மூஸா ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸை விளையாட்டுத்துறை அமைச்சில் சந்தித்து ஜோர்டான் இலங்கை நட்புறவை மேலும் வலுப்படுத்திப் பேணுவது தொடர்பில் கலந்துரையாடினர். 
பிரதி அமைச்சர் ஹரீஸ் இலங்கை ஜோர்டான் நட்புறவு சங்கத்தின் தலைவர் என்றவகையில் ஜோர்டான் தூதுவர் ஹஸன் மஹ்மூத் முஹம்மட் அல் ஜவர்னேஃ டில்லியில் இருந்து வருகைதந்து மேற்படி விடயம் கலந்துரையாடப்பட்டது. 

இதன்போது ஜோர்டான் இலங்கை நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான பொறிமுறைகளை ஆராய்ந்ததோடு வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் ஜோர்டான் அரசு பங்களிப்புச் செய்வதற்கான சாத்தியப்பாடு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

மேலும் பிரதி அமைச்சர் ஹரீஸ் ஜோர்டான் அரச தலைவர்களை சந்திப்பதற்கான அழைப்பை ஜோர்டான் அரசு சார்பாக இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கான ஜோர்டான் தூதுவர் விடுத்திருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -