இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 2 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 173 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் அசேல குணரத்ன ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.