நாங்கள் ஒரு போதும் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏழு பேர்ச் காணி தா என்று கேட்கவில்லை.!

க.கிஷாந்தன்-
ன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு 07 பேர்ச் காணி என வரையறுக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் ஒரு போதும் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏழு பேர்ச் காணி தா என்று கேட்கவில்லை. தோட்டங்களை தொழிலாளர்களுக்கு பெற்றுத்தாருங்கள் என்று தான் கேட்டுள்ளோம்.

அதன் விளைவாக தான் கொட்டகலை பகுதியில் 20 பேர்ச் காணியில் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளோம். அதனை கூட இங்கு கூறக்கூடாது ஏன் என்றால் ஏழு பேர்ச் காணியினை வைத்துக்கொண்டு மீதியை தந்து வீடுங்கள் என்று கேட்டு விடுவார்கள். எனவே நிறைய விடயங்களை நாம் சொல்ல முடியாத நிலையிலேயே இருக்கின்றோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

1983 ம் ஆண்டு வன்செயலால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட சாமிமலை மீரியகொடை வேளாமை கிராமத்தில் குடியயேறி விவசாயத்தினை மாத்திரம் நம்பி வாழும் சுமார் 100 குடும்பங்களைச் சேரந்த 700 பேருக்கு சுமார் 16 கோடி ரூபா செலவில் மின் இணைப்பு வழங்கும் நிகழ்வு 05.02.2017 அன்று இ.தொ.காவின் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவத்தார்

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தோட்டத்தொழிலாளர்கள் ஒரு வருடம் மாத்திரம் ஒரு கட்சியில் இருந்தால் தோட்டத்தொழிலாளர்களை தோட்ட உரிமைகளாக்குவேன் என நான் ஒரு மே தின கூட்டத்தில் கூறினேன். ஆனால் அது இன்று வரை நடக்கவில்லை. நடக்கவும் நடக்காது. காரணம் ஒரு தோட்டத்தில் பல கட்சிகள் இருப்பதால் தான் எமது உரிமைகளை நாம் பெற்றக்கொள்ள முடியாது உள்ளது. இன்று ஒரு குடும்பத்தை எடுத்து கொண்டால் மனைவி ஒரு கட்சி கணவன் ஒரு கட்சி என பிரிந்து பல கட்சிகளாக பிரிந்து காணப்படுகிறார்கள். அன்று எல்லோரும் ஒரு கட்சியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் தான் எம்மல் நிறைய விடயங்களை பெற்றுக்கொடுக்க முடிந்தது. என்று நீங்கள் ஒற்றுமையாக இருக்கின்றீர்களோ அன்று உங்களைத் தேடி அத்தனையும் வரும்.

அன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைச்சு பதவியில் இருக்கும் போது அப்போது செயலாளராக இருந்து வாமதேவன் அவருடன் இணைந்து தான் மலையக அபிவிருத்தி 10 ஆண்டு திட்டம் தயாரிக்கப்பட்டது. 

அப்போது அவர் அப்போது முத்துசிவலிங்கம் அமைச்சில் தான் பணிபுரிந்தார். இன்று அவர் வேறுவொரு அமைச்சில் ஆலோசகராக இருக்கிறார். அதனை தான் இன்று அவர்கள் 10 ஆண்டு திட்டம் என படம் போட்டு காட்டுகிறார்கள். கடந்த காலங்களில் இலங்கைக்கு வழங்கப்பட்ட 50,000 வீடுகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 4000 வீடுகளை இந்திய அரசாங்கத்திடம் கேட்டு வாங்கியது. 

அதனை இன்று அவர்கள் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே இவர்கள் எதனையும் புதிதாக செய்யவில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செய்ததை தான் முன்னெடுத்து வருகிறார்கள்.

எமக்கு இருக்கின்ற காணிகளை நாம் ஒரு போதும் விட்டு கொடுத்து விட முடியாது. அதற்கு தேவையான சட்ட ரீதியான ஆவணங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் ஒற்றுமையாக ஒன்று பட்டு ஒரு கட்சியில் இருந்தால் உங்களுக்கு தேவையானவற்றை நான் பெற்றுத்தருவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு இ.தொ.காவின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், மத்திய மாகாண அமைச்சர் எம். ரமேஸ்வரன் உட்பட மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கணகராஜ், சத்திவேல், முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் தினேஸ், முன்னாள் கல்வி அமைச்சர் அனுசா சிவராஜா, முன்னாள் பிரதி அமைச்சர் ஜெகதீஸ்வரன், இ.தொ.காவின் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாத், இ.தொ.காவின் மாவட்ட உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -