மாகாண வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம்-2016 இன் கீழ் அட்டாளைச்சேனை கடற்கரை வீதி (அல்- முனிறா பாடசாலை வீதி) கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி,காணி மற்றும் காணி அபிருத்தி ,மகளிர் விவகார,திறன் அபிருத்தி மற்றும் திணைக்களத்தின் மேற்பார்வையில் கீழ் ரூபா 12,252,314.83 செலவில் காபட் இடப்படும் பணிகள் 2016.08.16 ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் முதற்கட்டப் பணியாக வடிகாண்கள் இடப்படும் வேலைகள் பிரதான வீதியில் இருந்து சரிப் ஹாஜீயார் வீதி சந்தி வரையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மீதியாக இருக்கும் பகுதிகளில் வடிகான்கள் அமைக்கப்படவில்லை என்பதுடன் ,ஏற்கனவே வீதியின் இருமருங்கிலும் வடிகான்கள் கற்கள் நிரப்பபட்டு மூடப்பட்டுள்ளது. வெள்ளநீர் வடிந்தோடுவதற்கு எவ்வித வழிகளும் செய்யப்படாமல் , முறையான திட்டமிடல் இன்றியும் மிக அவசரமாக காபட் இடப்பட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான முறையான திட்டமிடல் இன்மையால் இவ்வீதிகளில் உள்ள வீடுகள் மழைகாலங்களில் மூழ்கும் அபாயத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவ்வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் பல முறை செப்பனிடப்பட்டதன் மூலம் வீதியின் உயரம் உயர்த்தப்பட்டுள்ளது தவிர,மழை காலங்களில் வெள்ளநீர் வழிந்தோடக் கூடிய முறையில் அமைக்கப்படவில்லை.
ஏற்கனவே இவ்வீதியில் வசிக்கும் சில தனி நபர்கள் தங்களது சுய தேவைகளுக்காக வீதியின் இரு மருங்கிலும் சில அடி தூரங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டிடங்களை அமைத்துள்ளனர்.
இதனால் வீதியின் சில பகுதிகளில் அகலம் சுருக்கப்பட்டு ,வாகன நெரிசலுக்கும்,விபத்துக்கள் ஏற்படவும் காரணமாக அமைந்துள்ளன. இவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை விடுவித்து வீதியை அகலமாக்கி வடிகான்களை அமைக்கும் பணிக்கு தங்களது பதவி,அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி முறையான வீதி அபிவிருத்தி இற்கு தடையாக உள்ளனர். இதற்கு சில வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.
எனவே இதனை கருத்திற்கொண்டு முறையாக வடிகான்கள் அமைத்து, வீதியை சரியான அளவில் தோண்டி ,வெள்ளநீர் வழிந்தோடக்கூடிய முறையில் வீதியை அமைக்குமாறு இவ்வீதியில் வசிக்கும் பொதுமக்களாகிய நாங்கள் உரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுப்பதுடன் ,அதற்குரிய நடவடிக்கைகளை விறைந்து மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
இப்படிக்கு
கடற்கரை வீதி வதிவிடத்தார்கள்
எனவே இதனை கருத்திற்கொண்டு முறையாக வடிகான்கள் அமைத்து, வீதியை சரியான அளவில் தோண்டி ,வெள்ளநீர் வழிந்தோடக்கூடிய முறையில் வீதியை அமைக்குமாறு இவ்வீதியில் வசிக்கும் பொதுமக்களாகிய நாங்கள் உரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுப்பதுடன் ,அதற்குரிய நடவடிக்கைகளை விறைந்து மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
இப்படிக்கு
கடற்கரை வீதி வதிவிடத்தார்கள்