தாருஸ்ஸலாம் பற்றிய சில உண்மைகள்..!

எஸ்.பர்சான் -
தாருஸ்ஸலாம் காலஞ்சென்ற தலைவர், மர்ஹ_ம் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நம்பிக்கை நிதியம் மற்றும் தாருஸ்ஸலாம் கட்டிடம் சம்பந்தமாக தவறான கருத்துக்களை பரப்பியும் மக்கள் மனங்களை குழப்பியும்

தன் சொந்த எதிர்பார்ப்புடனான இலக்கை அடைந்து கொள்ள முயற்சிக்கின்ற விசமிகளின் முக்கிய நோக்கம், குறிப்பிட்ட சிலரை அவமானத்துக்குள்ளாக்குவதேயன்று வேறு ஒன்றும் இல்லை என்பதே தெளிவான விடயமாகும். அதற்காக இவர்கள் உண்மையான விடயங்களை மறைத்து தவறான விசம கருத்துக்களை சமர்பித்து மக்களை குழப்பத்தில் ஆக்குவதற்கும், வெறுப்பிப்பதற்குமான முயற்சியே நடைபெறுகிறது.

இந்த விசமப் பிரசாரம் சம்பந்தமாக யோசித்து பார்க்கையில் தலைவர் அஷ்ரப்புடன் நம்பிக்கை நிதியம் ஸ்தாபிக்கும் பணியில் அதன் ஆரம்பத்திலிருந்தே கடைசி வரையிலும் சம்பந்தப்பட்ட ஒரே நபர் என்ற ரீதியில், நான் அறிந்து வைத்துள்ள சில முக்கிய உண்மையான விடயங்களை தெளிவுபடுத்துவது எனது கடமையாகும் என நினைக்கின்றேன்.

தற்போது சமூகத்தில் பரப்பி வருகின்ற தவறான கருத்துக்கள் பற்றி உண்மையை புரிந்து கொள்வதற்கும், அஷ்ரப் தலைவரின் நற்பெயருக்கு அவமானப்படுத்த முயற்சிப்பதை தடுப்பதற்கும் இதனூடாக முடியும் என்றே நினைக்கின்றேன். “தாருஸ்ஸலாம்” கட்டிடம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையக கட்டிடமாக நிறுவப்பட்ட போதிலும் தலைவர் அஷ்ரப் அவர்கள் பிற்காலத்தில் அதனை நம்பிக்கை நிதியம் ஒன்றின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று தீர்மானித்து அதனூடாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கின்ற அனைத்து உறுத்து உரிமைகளையும், அந்த நம்பிக்கை நிதியத்துக்கு மாற்றுவதற்கும், அவரது தனிப்பட்ட சொந்தமாகவுள்ள ஏனைய சொத்துரிமைகளையும் அந் நிதியத்துக்கே வழங்கியும் அவர் மிகவும் சமூகத்துக்கு திறனான சேவைகளை வழங்குவதுமே அவரது எதிர்பார்ப்பாக இருந்தது.

தலைவர் அஷ்ரப்பின் மிகவும் நெருங்கிய உற்ற நண்பரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவிடம் உத்தேச நம்பிக்கை நிதியத்துக்கு சட்ட வரைவுகளை அமைக்க ஆலோசணைகள் பெறப்பட்டதோடு நிதியத்தின் சட்ட வரைவு நடவடிக்கைகள் சுமாராக பல மாதங்கள் இடம் பெற்று வந்தன. அந்த நிதியம் ஆரம்பித்தல் சம்பந்தமான சட்ட வரைவு குறிப்புகள் 50 க்கும் மேற்பட்டதாக இருந்ததோடு அதன் பிரதிகள் தற்போதும் என்னிடம் இருக்கின்றது.

அந்த நம்பிக்கை நிதியத்தின் ஆரம்பகால நிருவாக உறுப்பினர்கள் 14 பேர்களை கொண்டதாகவும், அந்த நிருவாக அங்கத்துவ வடிவமைப்பினூடாக தெளிவான ஒரு விடயம் என்னவெனில் அவர்களில் அநேகமானவர்கள் தலைவர் அஷ்ரப்பின் குடும்ப உறவினர்களும் அவருக்கு மிகவும் விசுவாசமுள்ள நெருங்கிய நண்பர்கள் என்பதே ஆகும். அந்த நிதியம் ஆரம்பித்த காலத்திலேயே, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அந் நிதியத்தின் நிருவாகத்திலிருந்தும் அதன் முகாமைத்துவத்திலிருந்தும் தூரமாக்கி வைப்பதுமே தலைவரின் நோக்கம் என்று அவரது நடவடிக்கைகள் மூலம் தெளிவாக நான் புரிந்து கொண்டேன். யாதெனில் நிறுவாக அங்கத்தவர்கள் தெரிவு செய்துள்ள விடயம் இதற்கு நல்ல உதாரணம் ஆகும்.

தலைவர் அஷ்ரப்பின் வாய்மூல பேச்சுக்களினூடாக வெளியான செய்தியும், அதன் பிரகாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதித்துவமும் ஒரேயொருவருடன் மட்டுப்படுத்தும் வகையிலும் அன்றைய கட்சியின் பொதுச் செயலாளரும், தற்போதைய தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீம் ஒருவர் மாத்திரமே நிதியத்தின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டார். இதனூடாக தலைவர் அஷ்ரப் எமக்கு தந்துள்ள தெளிவான ஒரே செய்தி என்னவெனில், நம்பிக்கை நிதியத்திலோ அதன் சொத்துரிமைகளிலோ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ_க்கு எந்த உறுப்பு உரிமையும் இல்லை என்றும், கட்சிக்கும் நிதியத்துக்கும் எந்த தொடர்பும் இருக்க கூடாது என்பதே ஆகும். அப்பொதே அவருடன் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர்களுக்கு மத்தியில் பேசப்பட்ட விடயம் கட்சி அங்கத்துவர்கள் நம்பிக்கை நிதியத்தில் தலையீடுகள் செய்யக் கூடாது என்பதாகும்.

எவ்வாராயினும், தாருஸ்ஸலாம் கட்டிடத்தை நம்பிக்கை நிதியத்தின் நிருவாகத்திலிருந்தும், அதன் முகாமைத்துவத்திலிருந்தும் தூரப்படுத்தும் தலைவரின் நடவடிக்கைகள் பற்றி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அன்றைய சிரேஷ்ட அங்கத்தவர்களது உள்ளங்களிலே அமைதியான எதிர்ப்பு தோன்றியதையும் இங்கு ஞாபகமூட்ட வேண்டும். எது எவ்வாராயினும் அன்று கட்சியின் தலைமை கட்டிடமான தாருஸ்ஸலாம் கட்டிடத்தை தலைவரின் பெயருக்கே மாற்றி விடும் அளவுக்கு கட்சியின் உயர்பீடம் தீர்மானித்ததோடு தலைவர் முன்னிலையில் ஒன்றுக்கு மேல் ஒன்றாக மாற்று கருத்து தெரிவிக்கவோ சவால் விடவோ யாருக்கும் சக்தி இருக்கவுமில்லை. அதற்கு துணை போகவுமில்லை என்று தான் கூற வேண்டும்.

அந்த காலகட்டத்தில் ஒரு நாள் இரவு தலைவரின் இல்லத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும் தலைவரும் கலந்துரையாடிக் கொண்டிருக்கையிலே சட்டத்தரணி பாயில் முஸ்தபா கூறியதாவது நம்பிக்கை நிதியத்தின் தலைமைத்துவத்துக்கு தெரிவு செய்யப்படுபவர் நிச்சயமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவராக இருப்பதும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகளுக்கு தாருஸ்ஸலாம் கட்டிடத்தில் ஒரு பகுதி இலவசமாக வழங்கப்படுவதும் கட்டாயமான விடயம் என்று ஒரு பிரேரணையை சமர்பித்தார். அந்த இரு பிரேரணைகள் அடங்கிய யோசனையை அன்றே தலைவர் ஆமோதித்ததோடு அதனை நிதியத்தின் சட்ட வரைவில் (யாப்பில்) உள்ளடக்கவும் செய்தார். சட்ட வரைவு முடிவுற்றதும், அன்று துறைமுக அதிகார சபையின் உப தலைவர் அலுவலகத்தில் அதை சரிபார்த்து உரிய பிரகாரம் அச்சிடப்பட்டு தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து நம்பிக்கை நிதியத்தின் அங்கத்தவர்களின் கையொப்பம் பெறும் பொறுப்புக்கள் என்னிடம் சாட்டப்பட்டதோடு, அவ்வாறே நான் அனைத்து பொறுப்புக்களையும் பூர்த்தி செய்து தலைவருக்கு நானே ஆவணங்களை கையளித்தேன்.

அன்றைய தினம் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நம்பிக்கை நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு இராபோசனமும் வழங்கப்பட்டது. அன்று நம்பிக்கை நிதியத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்களுக்கு எல்லோரும் கையொப்பமிட்டதின் பின்பு எனக்கு தெரிந்த அளவில் எந்த காரணங்களுக்காகவோ மறைந்த தலைவர் அந்த நிதியத்தை செயல்படச் செய்ததாக காண முடியவில்லை. அவர் நிதியம் சம்பந்தமான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவும் இல்லைஃ அவர் மரணிக்கும் வரையில் அதனை செயல்படுத்த முற்பட்டதாக காணவுமில்லை.

நம்பிக்கை நிதியம் சம்பந்தமான வேறு ஆவணங்கள் நான் அவரிடம் ஒப்படைக்கும் போதெல்லாம் அவர் கவனயீனமாகவே இருப்பதால் அதுபற்றி விசாரிப்பதற்கோ, பேசவோ நான் முற்படவுமில்லை. தலைவர் அஷ்ரப்பிடம் நான் அவதானித்த முக்கியமான விடயம் யாதெனில் ஏதும் ஒரு விடயத்தை அவரிடம் சொல்கின்ற போது சம்பந்தப்பட்ட விடயத்தில் ஆர்வமில்லாது நடந்து கொண்டால் அல்லது அமைதிகாத்தால் தலைவர் அவ் விடயத்துக்கு அவர் விருப்பமில்லை என்பதே ஆகும்.

அவரது உள்ளத்தில் இருந்து வருகின்ற வாய்மூல உத்தரவுகள் உடல் ரீதியான அசைவுகள் மற்றும் செயல்பாடுகளின்; அவரது அலுவலக வேலைகளில் ஈடுபாடாக நான் இருந்தேன். அப்போதும் தலைவர் நம்பிக்கை நிதியம் சம்பந்தமாக அசமந்த போக்கை தொடர, நானும் அது பற்றிய முயற்சிகளை குறைத்துக் கொண்டேன். அந்த கட்டத்தில் தேசிய ஐக்கிய முன்னணி “நுஆ” கட்சியை ஆரம்பிக்கும் பணியில் தலைவர் மிகவும் ஈடுபாடு காட்டினதோடு அரசியல் ரீதியாக அவருக்கு தாருமாராக சவால்களும் ஒன்றின் பின் ஒன்றாக தோன்ற ஆரம்பித்து விட்டது. இதுவே, நம்பிக்கை நிதியத்தின் நடவடிக்கைகளை பின்னடையச் செய்ததாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

எதிர்பாராத நிலையில் இவ்வுலகத்தை விட்டு பிரிந்து சென்ற தலைவருக்குப் பின்பு கட்சியின் உள்ளக நெருக்கடிகள் மத்தியிலும் ஏனைய காரணங்களாலும் அந்த நம்பிக்கை நிதியம் பற்றிய ஞாபகம் என்னை விட்டு தூரமாக்கி விட்டது.

தகவல் : சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான், பா.உ

அடுத்த பகுதி : தலைவர் அஷ்ரப்பின் மறைவுக்கு பின் நம்பிக்கை நிதியத்துக்கு என்ன நேர்ந்தது?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -