மீராவோடை சுபைர்-
உதிரங்களை
உரமாக்கி
உணர்வுகளை
நீராய் பாய்ச்சி
வளர்த்தெடுத்த
கட்சிக்கு
வயது முப்பதுக்கு மேல்...!!!
கறையான்கள்
கட்டிய புத்துக்குள்
கருநாகங்கள்
புகுந்து கொண்டது போல
தந்திரியாய் வந்து
மந்திரி மகுடம்
சுமந்தவர்கள்
களமிறங்கியிருக்கிறார்கள்
கட்சியை அழிப்பதற்கு...!!!
போராளிகளே
விழித்துக் கொள்ளுங்கள்...!!!
தேர்தல் வந்தால்
தேடி வருகிறார்கள்
முஸ்லிம் காங்கிரஸ்
தாய் வீடென்கிறார்கள்
தேர்தலில் வென்றவுடன்
புகுந்த வீட்டு மாப்பிள்ளையாகி
புறமுதுகு காட்டி திரிகிறார்கள்...!!!
சுயலாபங்களுக்காக
விலை போன
விற்பனை சரக்கெல்லாம்
சுய புத்தியில்லாமல்
தாய் வீட்டையும்
தலைவரையும்
திட்டி முனிகிறார்கள்...!!!
சமூகத்தை
ஏமாற்றி
ஏணியாக்கி
ஏறிக்கொண்டவர்கள்
எட்டி உதைக்கிறார்கள்...!!!
போராளிகளே விழித்துக் கொள்ளுங்கள்...!!!
தலைவருக்கு
தலைபோனாலும்
பறவாயில்லை
தங்கள் தலை
தவிசாளர் மகுடம்
சுமக்க வேண்டுமென்று
சில பேர் நினைக்கிறார்கள்...!!!
அதிகார ஆசையில்
சதிகாரனாய் மாறி
செயலாளர் பதவியில்
அட்டகாசமாய்
அமர்ந்து கொள்ள
ஆலாய் பறக்கிறார்கள்
சில பேர்...!!!
நட்டவன்
பார்த்துக் கொண்டிருக்க
தொட்டவன்
பழம் பறிக்க வருவதில்
நியாயமிருக்கிறதா....?
போராளிகளே சிந்தியுங்கள்...!!!
உச்சத்தில் ஏறிக்கொண்டு
எச்சத்தை
எங்கள் மீது வீசியவர்கள்
இன்னும் - எங்களை
ஏணிகளாகவும்
படிகளாகவும் நினைத்து
ஏறி மிதித்து
ஏறிக்கொள்ளப் பார்க்கிறார்கள்...!!!
இன்னுமா இவர்களை நம்புவது?
எவர் எக்கேடு கெட்டாலும்
பறவாயில்லை
தான் எம் பி யானால்
போதுமென்று
பேயாய் அலைகிறார்கள்
சில பேர்...!!!
பதவி வெறிபிடித்த
பச்சோந்திகள்
கொப்பு விட்டு கொப்பு பாய்ந்துவிட்டு
தப்பு தப்பாய்
தாளம் போடுகிறார்கள்
தலைகால் புரியாமல்
சில பேர்...!!!
நாங்கள்
கட்சிக்காக வாழ்ந்தவர்கள்
கட்சி வாழ வேண்டுமென்று
என்றும் நினைப்பவர்கள்
இலைமறை காயாய்
இன்னும் இருப்பவர்கள்...!!!
இன்ஷான் என்பவனிடத்தில்
தவறுகள் இருந்தே தீரும்
இதற்கு
தவைவர் விதிவிலக்கல்ல
தவறுக்கும் - மறதிக்குமிடையில்
மனிதன் இருக்கிறான்
என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்...!!!
இதற்காக
சீடி, வீடி, என்று
மிரட்ட வேண்டாம்
எல்லாரின் சீடியும்
எல்லோருக்கும் தெரியும்...!!!
கபுறையும்
மஹ்ஷரையும் எண்ணி
ஈபத் பேசுவதை விட்டுவிடுங்கள்
களங்கத்தோடு மரணிக்காமல்
சுவனத்தை நோக்கி -நாம்
பயணிக்க வேண்டும்...!!!
தலைவன் என்பவன்
தலை நிமிர்ந்துதான் நிற்பான்
தலைக் கனமென்று
தப்பாக நினைக்கவேண்டாம்.
தலை குனிந்து நிற்பவன்
தலைவனல்ல...
தலை நிமிர்ந்து நிற்பவன்தான்
தலைவன்...!!!
போராளிகளே
யதார்த்ததை புரிந்துகொள்ளுங்கள்
எவரிடத்தில் தவறில்லை...?
எவரிடத்தில் பிழையில்லை...?
தரக்குறைவாய்
பேசுகின்றவர்கள்
தன்னை ஒர தடவை
சுய பரிசோதனை
செய்து கொள்ளட்டும்...!!!
அழிக்க நினைத்தவர்கள்
அழிந்து போனதுதான்
வரலாறு
எண்ணங்களை
தூய்மையாக்குங்கள்
என்றும்
சமூகம் உங்களை மதிக்கும்
இல்லையேல்
சமூகம் மிதிக்கும்
என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்...!!!
தலைவருக்கு
வக்காலத்து
வாங்குகிறேனென்று
தப்பாக எண்ணவேண்டாம்
தலைவரை
எனக்கு தெரியும்
தலைவருக்கு
என்னை தெரியாது...!!!
இலை மறைகாய்
போராளியாய்
இன்றுமிருக்கிறேன்
இதனால்
பல நஷ்டங்களையும்
பல கஷ்டங்களையும்
கண்டவன் நான்
இதற்காக
நான் யாரிடமும் யாசிக்கவுமில்லை
இதப்பற்றி யோசிக்கவுமில்லை...!!!
வாசிக்காக
வசை பாடவுமில்லை
காசிக்காக
கவிதை சொல்லவுமில்லை
கட்சி நேசிப்பின்
நேர்த்திக் கடனாய்
இதை சொல்ல வந்திருக்கிறேன்...!!!
தப்பாக கணக்குப் போட்டு
தடைக்கல்லாய் - நீங்கள்
இருக்க வேண்டாம்
தடைக்கற்களை
படிக் கற்களாய் மாற்றி
பயணிக்கின்ற
பக்குவம்
தலைவனுக்குண்டு...!!!
தலைவரே
தலை நிமிர்ந்து நில்லுங்கள்
தடைகள்
தூசாக பறக்கும்...!!!
கூட இருந்து
குழிபறிப்பவர்கள் - அந்த
குழிக்குள்ளேயே
வீழ்ந்து கிடக்கும் - நாள்
வெகு தொலைவிலில்லை...!!!
இன்ஷா அல்லாஹ்.
தலைவனல்ல...
தலை நிமிர்ந்து நிற்பவன்தான்
தலைவன்...!!!
போராளிகளே
யதார்த்ததை புரிந்துகொள்ளுங்கள்
எவரிடத்தில் தவறில்லை...?
எவரிடத்தில் பிழையில்லை...?
தரக்குறைவாய்
பேசுகின்றவர்கள்
தன்னை ஒர தடவை
சுய பரிசோதனை
செய்து கொள்ளட்டும்...!!!
அழிக்க நினைத்தவர்கள்
அழிந்து போனதுதான்
வரலாறு
எண்ணங்களை
தூய்மையாக்குங்கள்
என்றும்
சமூகம் உங்களை மதிக்கும்
இல்லையேல்
சமூகம் மிதிக்கும்
என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்...!!!
தலைவருக்கு
வக்காலத்து
வாங்குகிறேனென்று
தப்பாக எண்ணவேண்டாம்
தலைவரை
எனக்கு தெரியும்
தலைவருக்கு
என்னை தெரியாது...!!!
இலை மறைகாய்
போராளியாய்
இன்றுமிருக்கிறேன்
இதனால்
பல நஷ்டங்களையும்
பல கஷ்டங்களையும்
கண்டவன் நான்
இதற்காக
நான் யாரிடமும் யாசிக்கவுமில்லை
இதப்பற்றி யோசிக்கவுமில்லை...!!!
வாசிக்காக
வசை பாடவுமில்லை
காசிக்காக
கவிதை சொல்லவுமில்லை
கட்சி நேசிப்பின்
நேர்த்திக் கடனாய்
இதை சொல்ல வந்திருக்கிறேன்...!!!
தப்பாக கணக்குப் போட்டு
தடைக்கல்லாய் - நீங்கள்
இருக்க வேண்டாம்
தடைக்கற்களை
படிக் கற்களாய் மாற்றி
பயணிக்கின்ற
பக்குவம்
தலைவனுக்குண்டு...!!!
தலைவரே
தலை நிமிர்ந்து நில்லுங்கள்
தடைகள்
தூசாக பறக்கும்...!!!
கூட இருந்து
குழிபறிப்பவர்கள் - அந்த
குழிக்குள்ளேயே
வீழ்ந்து கிடக்கும் - நாள்
வெகு தொலைவிலில்லை...!!!
இன்ஷா அல்லாஹ்.