இந்த நாட்டு வரலாற்றில் சொத்து விபரங்களை தேர்தல்கள் செயலகத்துக்கு வழங்கிய முதலாவது ஜனாதிபதி நானாவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உத்தியோகபுர்வ நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
இச்சட்டம் நிறைவேறியவுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் சொத்து விபரங்களை வழங்குமாறு தனியார் நிறுவனமொன்று வேண்டுகோள் விடுத்திருந்தது எனவும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.
நாட்டிலுள்ள ஜனாதிபதியொருவர் தனது சொத்து விபரங்களை வழங்க வேண்டும் என்ற சம்பிரதாயம் இந்நாட்டில் இருக்கவில்லை. ஆனால், நான் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது என்னுடைய சகல சொத்து விபரங்களையும் வழங்கியே இருந்தேன் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டிருந்தார்.