ஹசனலி இரண்டு விடயங்களில் குற்றவாளி ஆவார்...!

ஸ்ரீ.ல. முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளியான ஹசன் அலி சேர் அவர்கள் அண்மைக்காலமாக, அந்த கட்சியின் தலைமையோடு கருத்துவேறுபாடு பட்டுக்கொண்டு வருவதை நாம் அவதானிக்கின்றோம்....

அதில் முக்கியமாக அவர் குறிப்பிடும் விடயம் என்னவென்றால், கட்சியின் முக்கிய பதவிகளில் ஒன்றான, தான்வகித்த செயலாளர் பதவியை பறித்தெடுத்தது மட்டுமல்ல, அந்த பதவியின் அதிகாரங்களை குறைத்துவிட்டு, தனது கட்டளைக்கு இயங்கும், அதேநேரம் சம்பளம் பெறக்கூடிய ஒருவராக செயலாளரை மாற்றிய விடயமாகும்.அந்த செயலாளர் தலைவரின் கட்டளைகளை நிறைவேற்றும் ஒரு பணியால் போன்றே செயல்படுவார்.இவர் மூலம் எந்தவித நண்மையையும் கட்சி அடையமாட்டாது, மாறாக தலைவர் சர்வதிகாரியாக மாறி கட்சியை வழிநடத்தவே அது உதவும் என்றும் கூறி வருகின்றார்.

அதே நேரம் கட்சியின் முக்கிய பதவியான தலைவர் பதவி கிழக்குக்கு வெளியே இருப்பதனால், கட்சியின் முக்கிய பதவியான செயளாலர் பதவி கிழக்கில் இருக்கவேண்டும் என்றும் நியாயப் படுத்திவருகின்றார். அதன் அடிப்படையில், ஹசனிலி சேர் அவர்கள் கட்சி தலைமையால் பலவழிகளிலும் புறக்கணிக்கப்படுவதாவும், அவமானப்படுத்தப்படுவதாகவும் கூறி, அதனை மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் பாணியில் மக்காவுக்கு உம்ரா பயணம் சென்று, அங்கே இந்த கட்சியின் தற்போதைய தலைவரின் முனாபிக்தனத்தை கஃபத்துல்லா முன் வைக்கபோகின்றேன் என்றும், அதன் பின் ஒவ்வொறு வீதியாக சென்று தனக்கு நடந்த அநியாயங்களை மக்களுக்கு எடுத்துக்கூறப்போகின்றேன் என்றும் கூறிவருகின்றார்.

தனக்கு கட்சி தலைவர் செய்த துரோகங்களை பற்றி கவலைப்படுகின்ற ஹசனலி அவர்கள், அண்மைகாலமாக கட்சியின் தலைவருக்கு எதிராக வந்துகொண்டிருக்கும் பொதுவான குற்றச்சாட்டுக்களை பற்றி கண்டுகொள்வதாக எங்களுக்கு தெறியவில்லை. அவருடைய பிரச்சினை தீர்க்கப்பட்டால் போதும் என்ற மன நிலையில்தான் ஹசனலி அவர்கள் இருந்து வருகின்றார். தன்னுடைய பறிக்கப்பட்ட செயளாலர் பதவிக்கான அதிகாரங்களும், தலைவரினால் வாக்களிக்கப்பட்ட எம்பி பதவியும் கிடைத்தால் போதும், அதன் பிறகு நான் கட்சித்தலைவரோடு சுமுகமாக பயணிப்பேன் என்ற நிலைப்பாட்டிலும் உள்ளார்.

அதே நேரம்,..அண்மைகாலமாக பசீர் சேகுதாவுத் அவர்களின் மூலமாகவும், மருதமுனையை சேர்ந்த சட்டத்தரணி துல்ஷான் போன்றவர்களாலும், தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைகள் என்ற புத்தகம் மூலமும் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும், அந்த கட்சியின் மூத்த போராளி என்ற அடிப்படையில் எந்த கருத்தையும் அவர் கூறாமல் இருக்கின்ற விடயமும், அவருடைய நம்பகத்தண்மையை கேள்விக்கு உட்படுத்துகின்றது. கட்சியில் ஹசனலி சேர் அவர்களுடைய பிரச்சினை பேசப்படவேண்டிய ஒன்றாக இருந்தாலும், அதைவிட மேலாக, தலைவரின் மேல் மற்றவர்களினால் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களும் சின்ன பிரச்சினை என்று தட்டிக்கழிக்க முடியாது.

அந்த குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தண்மையை ஹசனலி சேர் அவர்கள் நூறுவீதம் அறிந்தவர் என்ற வகையில், அந்த குற்றச்சாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தகுதி அவருக்கு உண்டு என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடம் இருக்கமுடியாது. அந்தவகையில் தலைவரின் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யாக இருக்குமேயானால், ஹசனலி அவர்கள் அது பொய்யான குற்றச்சாட்டுக்கள் என்று பகிரங்கமாக கூறவேண்டிய பொறுப்பில் உள்ளவராவார். 

அல்லது அந்த குற்றச்சாட்டுக்கள் உண்மையானதாக இருந்தால், அந்த குற்றச்சாட்டுக்களினூடாக சொல்லப்படும் குற்றங்களை, தலைவர் அவர்கள் செய்து கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்த குற்றத்துக்கு அவரும் ஆளாகவேண்டியவர் ஆவார். ஹசனலி சேர் அவர்கள் இந்தப்பிரச்சினைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் நடந்து கொள்வாரேயானால் மாபெரிய குற்றத்தை சமூகத்துக்கும், படைத்த இறைவனுக்கும் செய்த குற்றத்துக்கு ஆளாவார் என்பதே உண்மையாகும்.

ஆகவே, தலைவர் ஹக்கீம் அவர்கள் எந்தக்குற்றத்தை செய்தாலும் பரவாயில்லை, எனது விடயம் தீர்க்கப்பட்டால் போதும் என்று அவர் நினைத்து பேசாமல் இருப்பது என்பது சமூகத்துக்கு செய்யும் பாரிய துரோகமாகத்தான் கருதப்படும். இந்த ரகசியங்களை தனது சுயநலத்துக்காக மூடி மறைப்பாரேயானால், ஹசனலி சேர் அவர்கள் இரண்டு விடயங்களுக்கு இறைவனிடம் தண்டைனை பெறவேண்டிவரும்..

ஒன்று, அப்பாவியான ஒருவர் மீது பொய்க்குற்றச்சாட்டை இன்னொருவர் வைக்கும் போது அதனை உண்மைதெறிந்தும் பார்த்துக்கொண்டிருந்ததற்காக. இரண்டு, ஒரு சமூகத்தின் தலைவன் மோசமான செயல்பாடு உடையவன் என்று தெறிந்து கொண்டும், அதனை பற்றி கண்டும் காணாதது போல் நடந்துகொண்டதற்காக.

இப்படியான நிலையில் மக்காவுக்கு சென்று அல்லாஹுவிடத்தில் என்ன முறைப்பாட்டை முன்வைக்கப்போகின்றார் என்பது கேள்விக்குறிய விடயமாகும்.முறைப்பாட்டை முன்வைப்பவர் முதலில் நேர்மையானவராக இருக்கவேண்டும், அப்படியில்லாது விட்டால் என்ன நடக்கும் என்பதை நாம் அறிவோம். ஆகவே உலக வாழ்க்கைக்காகவும்,பட்டம் பதவிக்காகவும், பணத்துக்காகவும் தனக்கு தெறிந்த உண்மைகளை மறைப்பதும், ஒருவர் எவ்வளவு தவறு செய்தாலும் தனது சுயநலத்துக்காக அதனை கண்டும் கானாதது போல் நடந்து கொள்வதும், தங்களுக்கு வெற்றி போல் தெறிந்தாலும் அது உங்களுக்கு தோல்விதான் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது என்பதே உண்மையாகும்.

ஹசனலி சேர் அவர்கள் இதனை கருத்தில் கொண்டு இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அல்லாஹ் உங்களுக்கு அதற்குறிய கூலியை நிச்சயம் வழங்குவான் என்பதில் சந்தேகமே இல்லை...

எம்.எச்.எம்.இப்ராஹிம்,
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -