ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலையின் பல பகுதிகளிலும் இன்று (22) காலை வேலையில் திடீரென்று 7.00 மணியளவில் இருந்து சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் மூடு பணி பிரதேசங்களை மறைத்து காணப்பட்டது குறிப்பாக கரையோரப் பகுதிகளில் விசேடமாக இதன் நிலை கூடுதலாக காணப்பட்டதனால் மீனவர்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
திசைமாறிய பயணங்களும் இதன் காரணமாக ஏள்பட்டுள்ளமையும் இது கிழக்குப் பகுதியில் இவ்வாறான திடீரென்று ஏற்பட்ட மூடு பணி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப் பணியினால் குளிரான கால நிலை தோன்றவில்லை எனவும் வழமையான காலநிலையே காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது கிண்ணியா கரையோரப் பகுதி, மூதூர் திருகோணமலை உட்பட பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.