கல்முனையில் இலவச ஊடகப் பயிற்சி..!

எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ம்பாறை மாவட்ட சமூகசேவை அமைப்பான அட்சோ (ADSSO) நிறுவனம் இம்மாவட்டத்தில் ஊடகப் பயிற்சி நெறியை முற்றிலும் இலவசமாக நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு அமைப்பின் தலைவர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் கல்முனையில் நடைபெறும்.

அனுபவமும் தேர்ச்சிமிக்க துறைசார் ஊடகவியலாளர்கள் பலர் வளவாளர்களாகக் கலந்து கொள்ளவிருப்பதுடன் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை, சமூக ஊடகங்கள் தொடர்பாகவும் மற்றும் நாடகங்களும் அரங்கியலும் பற்றியும் செயன்முறையுடனான பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.

வாரஇறுதி நாட்களில் நடைபெறவுள்ள இப்பயிற்சி நெறியில், இத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியல் கல்லூரி பயிலுனர்கள், பாடசாலை மாணவர்கள் சகலரும் பங்குபற்றலாம். பயிற்சி நெறியின் முடிவில் பெறுமதிமிக்க சான்றிதழ் வழங்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு 077-2093544, 076-7822707, 077-2355777 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும், குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் மாத்திரமே சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதால் பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுமாறும் கேட்கப்படுகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -