உமர் அலி-
தெகியத்த கண்டிய ,மஹாஓயா ஆதார வைத்தியசாலைகளுக்கு சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்களது முயற்சியால் மத்திய அரசினூடாக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட வைத்திய உபகரணங்கள் நேற்று சனிக்கிழமை 2017:02:18 அன்று கையளிக்கப்பட்டன. அத்துடன் சுகாதார வைத்திய அதிகாரிக்கான விடுதியும் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வினைத் தொடர்ந்து மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கட்டுமான வேலைப்பாடுகளையும் சுகாதார பிரதி அமைச்சர் பார்வையிட்டார்.
கடந்த வருடம் பிரதியமைச்சர் பைசால் காசீம் குறித்த வைத்தியசாலைகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தவேளை போதியளவு மருத்துவ உபகரணங்கள் இல்லாமையால் தரமான வைத்திய சேவையை மக்களுக்கு வழங்குவதில் தாம் இன்னல்களை அனுபவிப்பதாக வைத்தியசாலை நிருவாகத்தினர் குறிப்பிட்டிருந்தனர்.அமைச்சரும் அவற்றினை பெற்றுத்தருவதாக வாக்களித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து தேவையான உபகரணங்களை கொவனவு செய்வதற்காக வழக்கமாக ஒதுக்கப்படுகின்ற நிதியை விட மேலதிகமாக மத்திய அரசின் நிதியிலிருந்து ரூபா 120 மில்லியனை கிழக்குமாகாணத்திற்கு பைசால் காசீம் அவர்கள் ஒதுக்கீடு செய்தார்.அதன்மூலமாக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களே நேற்றைய தினம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளுடன் இணைந்ததாக தெகியத்த கண்டிய பிரதேச பாலர்பாடசாலைகளுக்கு குடிநீர் வடிகட்டும் உபகரணமும் வழங்கப்பட்டது.இந்நிகழ்வுகளில் கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ALM நசீர்,கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.K.கருணாகரன் ,கிழக்குமாகான சபை உறுப்பினர்களான,ஆரிப் சம்சுதீன்,தவம்,மாகிர்,மெத்தானந்த,மஞ்சுள ஆகியோருடன் கியக்குமாகான சபையின் தவிசாளர் கலப்பத்தி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.