அஷ்ரப் .ஏ.சமத்-
தென் ஆபிரிக்காவில் 30 வருடங்களுக்கு முன் கருப்பா் வெள்ளையா்களுக்கிடையிலான சன்டையின்போது தான் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கும் கருப்பு இன மக்களுக்கும் குரல் கொடுத்தமைக்காக எனது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தபால் குண்டு மூலமே நான் இரண்டு கைகளையும் இழந்தேன். ஆனால் யுத்தம் முடிந்து என்ணை அந்த நாட்டு மக்கள் அரசாங்கம் தனக்கு அழித்த ஒத்துழைப்பின் மூலமாக நான் உலக நாடுகளுக்கும் சென்று யுத்தத்தினால் அங்கவீனமாக்கப்பட்ட காணாமல் போன பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே என்னை அர்ப்பணித்து அவா்களது மனதினை திடகாத்திரமாக செயற்படுவதற்கே செயல் ஆற்றி வருகின்றேன்.
மேற்கண்டவாறு 2 வாரம் இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவா்களை ஆத்மீக ரீதியாகவும், மனரீதியாகவும் தைரியப்படுத்தும் முகமாக 2 வாரம் இலங்கை வந்துள்ள தென்ஆபிரிக்காவின் கிறிஸ்த்துவ கவுன்சிலின் உபதலைவரும், Institute of Healing of Memories பணிப்பாளா் அருட் சகோதரா் மைக்கல் லெப்சிலி இன்று (18) காலை கொழும்பு -07 ல் உள்ள தேசிய கிரிஸ்த்துவ நிலையத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே தெரிவித்தாா்.
இம்மாநாட்டில் மட்டக்குழி மிஸ்பா ஆலயத்தின் போதகா் ஜே.சாரணகபாண்டி, வன, ரோய் ஜசெக் ஆகியோறும் கலந்து கொண்டனா்.
மேலும் தென்ஆபிரிக்க மைக்கல் லெப்சிலி கருத்து தெரிவிக்கையில்;
தென் ஆபிரிக்கா போன்று கறுப்பா் வெள்ளையா் என்ற பாகுபாடின்றி காலம் சென்ற நெல்சன் மண்டேலேயா சகலருக்கும் சமமான அரசியல் பொருதாளார, உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தாா். அதேபோன்று இலங்கையில் சகல இன மக்களுக்கும் அனுபவிக்கக் கூடிய அதிகாரங்களை நாம் வழங்க வேண்டும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், அங்கங்களை இழந்தவா்கள், காணாமல் போனவா்கள் அவா்களை யுத்தம் முடிவடைந்த பின் நாம் அவா்களது உள்ளங்களை ஆத்மீக ரீதியாகவும் அவா்களது மதங்களுக்கேற்ப நாம் சரிப்படுத்தல் வேண்டும். இல்லாவிட்டால் கடந்த 2ம் உலக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களது மனசுகளில் அவா்கள் இறக்கும் வயதில் மன வடுக்களை வெளிக்காட்டுவாா்கள். நான் வடக்கு அநுாதபுரம் தெற்கு கொழும்பில் பல்வேறு இடங்களுக்குச் சென்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசியல் தலைவா்கள் மத தலைவா்களையும் சென்று கலந்துரையாடி பாதிக்கப்பட்ட மக்களை ஆங்காங்கே கண்டு அவா்களூடான சந்திப்புக்களை ஏற்படுத்த உள்ளதாகவும் தென்ஆபிரிக்க அருட் சகோதரா் மைக்கல் லெப்சிலி அங்கு தெரிவித்தாா்.