வாழைச்சேனை விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம் - தீர்வு கிடைத்தது

 ந.குகதர்சன், வாழைச்சேனை-

ட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் அறுவடை செய்யும் நெல் புதன்கிழமை முதல் நெல் சந்தைப்படுத்தும் சபையால் கொள்முதல் செய்யப்படும் என்று கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை இரவு இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்!

வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் உள்ள விவசாயிகள் அறுவடை செய்யப்படும் தங்களது நெல் அரசாங்கத்தின் நிர்ணய விலையில் தனியார் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படவில்லை என்றும், நெல் சந்தைப்படுத்தும் சபை கொள்முதலை இன்னும் ஆரம்பிக்க வில்லை என்றும் ஓட்டமாவடியில் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடாத்தி ஓட்டமாவடி பிரதேச செயலாளரிடம் மகஜரும் கையளித்திருத்தனர்.

அதனையடுத்தே பிரதேச செயலாளர் எனக்கு தெரியப்படுத்தியதையடுத்து நான் கிராமிய பொருளாதார அமைச்சர் ஹரிசன் மற்றும் கிழக்கு மாகாண நெல் சந்தைப்படுத்தும் சபையின் பிராந்திய முகாமையாளர் டபள்யு.எம்.என்.வீரசேகர ஆகியோரோடு தொடர்பு கொண்டு பிரச்சினை தொடர்பாக உரையாடினேன்.

இதன் பின்னர் புதன்கிழமை முதல் நெல் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் நாடு நெல் ஒரு கிலோ 38 ரூபாவுக்கும், சம்பா நெல் ஒரு கிலோ 41 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் ஒரு கிலோ 50 ரூபாவுக்கும் கொள்முதல் செய்யப்படும் என்று பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -