ட்ராம்பை விடவும் தனது தந்தை பணக்காரர் – நாமல்

மெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பை விடவும் தனது தந்தை செல்வந்தர் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமது தந்தை டொனால்ட் ட்ராம்பை விடவும் செல்வந்தர் என இந்த அரசாங்கம் கூறி வருவதாகவும், தந்தையின் கணக்கில் 18 பில்லியன் டொலர்கள் காணப்படுவதாக கூறி வந்த அரசாங்கம் தற்போது அந்த தொகையை ஒரு பில்லியனாக குறைத்துக் கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த இரண்டாண்டு காலப்பகுதியில் தாம் அதிகளவில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் காலத்தை கடக்க நேரிட்டது என குறிப்பிட்டுள்ள அவர், கைது செய்யப்பட்ட காலத்திலும் அதன் பின்னர் ஏனையவர்கள் கைது செய்யப்பட்ட போது பார்வையிடவும் என நீண்ட காலத்தை தாம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிலும் சிறைகளிலும் கடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -