தலைமை எனும் அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர் ஹக்கீம் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்வாரா -நாபிர்


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

ற்பொழுது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதிகாரமிக்க தலைவராக இருக்க கூடிய அப்துர் ரவூப் கிபத்துல் ஹக்கீமை கட்சியின் தலைமை பதவியிலிருந்து இறக்கி அதற்கு பதிலாக செயலாளர் பதவினை கொடுக்கும் பட்சத்தில் அவர் அதனை ஏற்றுக்கொள்வாரா? என்ற கேள்வி கட்சியின் தலைமை ஹசனலியிடமிருந்து நாசுக்கான முறையில் திட்டமிட்டு செயலாளர் பதவியையும், அதனுடைய அதிகாரங்கலையும் பறித்து அதற்கு பதிலாக அதிகாரமற்ற பதவியாக காணப்படும் கட்சியினுடைய தவிசாளர் பதவியினை ஏற்றுக்கொள்ளுமாறு பணித்த பொழுது அதனை ஹசன் அலி ஏற்றுக்கொள்ளாமல் வெளி நடப்பு செய்ததில் எந்த தவறும் கிடையாது என்ற யதார்த்தத்தின் அடிப்படையில் மேற்கூறிய கேள்வியினை ரவூப் ஹக்கீமினை பார்த்து கேட்க தோன்றுகின்றது என நபீர் பெளண்டேசன் இஸ்தாபக தலைவர் அல்-ஹாஜ் நபீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தினை தெரிவித்த நபீர் பெளண்டேசனின் இஸ்தாபகர்… சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் கட்சியின் தலைமையும் ,அதன் செயலாளர் பதவிகளுமே அதிகாரமிக்க இரண்டு பதவிகளாக காணப்படுகின்றது. முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக தலைவர் மர்ஹும் முஹம்மட் ஹுசைன் முஹம்மட் அஸ்ரஃப் கூறியதன் பிரகாரம் தலைவர் வட கிழக்கிற்குள் இருக்கின்ற பொழுது செயலாளர் நாயகம் வட கிழக்கிற்கு வெளியிலும், செயலாளர் நாயகம் வடகிழக்கில் இருக்கின்ற பொழுது தலைவர் வடகிழக்கிற்கு வெளியில் இருக்க வேண்டும் என்பது முக்கிய விடயமாகும்.

ஆகவே அதிகாரமிக்க செயலாளர் பதவியில் இருந்த ஹசன் அலியினை திட்டமிட்டு அப்பதவியிலிருந்து இறக்கி அதிகாரமற்ற தவிசாளர் பதவியினை ஏற்றுக்கொள்ளுமாறு பணித்தமையானது அவரை முற்றிலும் இழிவு படுத்தும் விதமாகவும், ஹசன் அலி பதவி மோகம் பிடித்தவர் என மக்கள் மத்தியில் காட்டுவதற்காக சோடிக்கப்பட்ட செயலாகவே பார்க்கப்படுகின்றது.

அது மட்டுமல்லாமல் குறித்த விடயம் சம்பந்தமாக தலைவர் ஹக்கீம் எடுத்த முடிவானது அம்பாறை மாவட்டத்தில் எவ்வகையான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதனை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது. இருந்தாலும் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களிலும் சகோதரர் ஹசன் அலி சார்ந்த நிந்தவூர் மற்றும் அட்டாளச்சேனை, கல்முனை போன்ற பிரதேசங்களில் இருக்கின்ற வாக்களர்கள் மிகவும் சமூக சிந்தனையுடன் சிந்திக்க வேண்டிய கட்டாய நிர்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரசின் தலைமை எடுக்கின்ற எல்லா முடிவுகளுக்கும் ஆமா சாமி போட்டுக்கொண்டு இருக்காமல் அரசியல் மறுமலர்ச்சியினை நோக்கி தங்களுடைய எதிர்கால நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது இருக்கின்ற இளைஞர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக சிந்தித்து செயலாற்ற கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறான நிலைமை சகோதரர் ஹசன் அலிக்கு மட்டுமல்லாமல் சகோதர பசீருக்கும் நிகழ்ந்துள்ளது. நாளைக்கு சகோதரர்களான மன்சூர் ஏ காதர், பாராளுமன்ர உறுப்பினர்களான மன்சூர், ஹரிஸ், பைசல் ஹாசிம், மற்றும் தவம், ஆரிஃப் சம்சுடீன், நசீர் போன்றவர்களும் நடை பெறாது என்று ஆணித்தரமாக கூற முடியாது. இன்று ஹசன் அலிகென்றால் நாளை ஹரிசிற்கு நடை பெறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இவர்கள் முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவத்திற்கு ஆமாம் போட்டு தலை ஆட்டுபவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களுடைய பதவிகளை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதே இன்று முஸ்லிம் காங்கிரசினுடைய எழுதப்படாத யாப்பாக இருக்கின்றது.

இந்த தோரணையில் அம்பாறை மாவட்டத்தில் தங்களை முஸ்லிம் காங்கிரசினுடைய அரசியல்வாதிகளாகவும், உறுப்பினர்களாகும் இன்று இனங்காட்டிகொண்டு இருக்க கூடிய கரையோர பிரதேசத்து மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கின்றார்கள் என்பதே நிதர்சனம் . இந்த ஏமாற்றம் எதிர்வருகின்ற தேர்தல்களில் நிச்சயமாக பிரதிபலிக்கும் விடயமாக மாறும் என்பதில் என்னிடம் மாற்று கருத்தில்லை.

ஆனால் இன்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை எடுத்துள்ள முடிவானது சிறந்த முடிவா அல்லது மக்களின் அபிலாசைகளுக்கு எதிரான முடிவா என்பதனை கூறுவதற்கு முன்னர் 2015ம் ஆண்டு இடம் பெற்ற பாரளுமன்ற தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு ஆதராவான சக்தியும், எதிரான சக்தியுமாக இரண்டு சக்திகள் களத்தில் குதித்திருந்தன. அந்த அவகையில் கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரசிற்கு இருந்த வாக்கு வங்கிகளில் இருந்த இருப்பினை விடவும் 2015ம் ஆண்டைய பாராளுமன்ற தேர்தலில் வாக்கு வங்கியின் இருப்பின் அளவு குறைந்தே காணப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள், மற்றும் அமைச்சர் றிசாட், அதாவுல்லா போன்றவர்களின் கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பேயாகும்.

இருந்தும் இதனை மறு பக்கத்தில் நோக்குகின்ற பொழுது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இருப்பில் தாக்கம் செலுத்தும் வகையில் அமைச்சர் றிசாட்டினுடைய அகில இலங்கை மக்கள் காங்கிரசானது முஸ்லிம் காங்கிரசிற்கு பெரும் எதிர்ப்பான சக்தியாக வளர்ந்திருகின்றது என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இதற்கு முக்கியமான காரணமாக பார்க்க வேண்டியது - கல்முனை, சம்மாந்துறை, அக்கறைப்பற்று போன்ற பிரதேசங்களில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் வேட்பாளராக களமிறக்கப்பட்டவர்கள் மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்களாகவும், மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்தவர்களாகவும் காணப்பட்டமையே முக்கியமான விடயமாகும். .

அந்த வகையிலேதான் சம்மாந்துறை போன்ற அதிகளவான வாக்காளர்களை கொண்ட தொகுதியில் உள்ள மக்கள் யாருக்கு உண்மையில் வாகக்ளிப்பது என்ற பிரச்சனையினூடாக தூர நோக்கு சிந்தனையுடன் சிந்திக்கின்ற வாக்காளர்களும், முஸ்லிம் காங்கிரஸ் மீது அதிருப்தி அடைந்துள்ள வாக்களர்களும் மாற்று வழி இல்லாமல் கடந்த 2015ம் ஆண்டைய பாராளுமன்ற தேர்தலில் புதுக கட்சியாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு 33000 வாக்குகளை அளித்திருந்தார்கள். குறிப்பாக சம்மாந்துர போன்ற அதிகளவிலான வாகக்ளர்களை கொண்ட தொகுதியில் இருக்கின்ற மக்களினுடைய எதிர்ப்பானது தனி நபருக்கு எதிரான எதிர்ப்பாக கருத்த முடியாது. அது முற்றிலும் முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஒரு கட்சிக்கு எதிரான எதிர்ப்பலையாகும்.

அதே போன்றே கல்முனை, பொத்துவில், அக்கறைபற்று போன்ற பிரதேசங்களையும் குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிரே வருகின்ற காலங்களில் இப்பொழுது இருக்கின்ற அதே வேட்பாளர்களை களமிறக்குவார்களாக இருந்தால் முஸ்லிம் காங்கிரசினுடைய இருப்பானது அம்பாறை மாவட்டத்தில் கேள்விக்குறியாக அமையும் என்பதில் அரசியல் விமர்சகர்களிடம் மாற்று கருத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் செயலாளர் நாயகம் ஹசன் அலி பதவியிலிருந்து நீக்கப்பட்ட விடயமானது அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு அம்பாறை மாவட்டத்தில் ஆதரவினை அதிகரிக்க செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறுவதற்கில்லை. மறு பக்கத்தில் தேசிய காங்கிரசிற்கான அலை அதிகரிக்க கூடிய வாய்ப்பு இருக்கின்றது போல் தெரிகின்றது. முன்னாள் அமைச்சர் அதாவுல்லா சார்ந்த அணியினர் தனித்து களமிறங்கும் பட்சத்தில் தேசிய காங்கிரசிற்கான ஆதரவு அதிகரிக்கும் என்ற கருத்துகளை பரவலாக பார்க்க கூடியதாக இருக்கின்றது.

இருந்தாலும் என்னுடைய பார்வையில் தற்பொழுது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையானது செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கு செய்துள்ள துரோகத்தின் எதிரொலியாகவும், சமகால அரசியலில் அம்பாறை மாவட்டத்து மக்களின் நிலையினை கருத்தில் கொண்டும் எதிரே வருகின்ற தேர்தலில் அதாவுல்லா சார்ந்த அணி, அமைச்சர் றிசாட் பதுர்டீனுடைய அணி, மற்றும் முஸ்லிம் காங்கிரசிற்கு எதிரான அரசியல் முன்னெடுப்புக்களை மேற் கொண்டு வருகின்ற அணியினர் எல்லோரும் ஒன்று சேர்ந்து முஸ்லிம் கூட்டமைப்பினூடாக களமிறங்குவார்களானல் முஸ்லிம் காங்கிரசிற்கு அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற இருப்பினை கேள்விக்குறியாக்கலாம் என்பது முக்கிய விடயமாக எமக்கு எதிரே முக்கியமக பார்கப்பட வேண்டிய விடயமாக உள்ளது..

ஒவ்வொரு குழுக்களும் பிரிந்து நின்று தனியான அரசியல் செய்ய முற்படுவார்களாயின் மீண்டும் முஸ்லிம் காங்கிரசின் தலைமையும், தலைம்மையின் கருத்திற்கு ஆமா போடுகின்றவர்களும் தங்களுடைய இருப்பினை தக்கவைத்து கொள்வதற்கான வாய்ப்புக்களே அதிகரிக்கும். எனவே வருகின்ற காலங்களில் சகல முஸ்லிம் அரசியல் தலைமைகளும் தங்களுகிடையில் இருகின்ற கருத்து வேறுபாடுகளை தூக்கி எறிந்து விட்டு பொது நலத்தினை கருத்தில் கொண்டு பொது கூட்டமைப்பில் களமிறங்குவதன் ஊடாக முஸ்லிம் சமூகத்தினுடைய இருப்புக்கள் சார்ந்த விடயத்திதல் வெற்றியினை அடைந்து கொள்ள முடியும்.

எனவே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் அநியாயமாக ஓரங்கட்டப்பட்ட, தூக்கி எறிப்பட்ட, கெளரவப்படுத்தபட வேண்டிய, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கு காப்பீடாகவும், வருகின்ற காலங்களில் அவருக்கு தேசியப்படியலினையாவது கொடுத்து முஸ்லிம் சமூகத்தினால் மதிக்கப்படுகின்ற வகையிலும், முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக உறுப்பினர் என்ற வகையில் அவரை கெளரவப்படுத்த வேண்டிய பொறுப்பு அம்பாறை மாவட்டத்து முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளினுடைய கட்டாய கடமையாகும் என்ற விடயத்தினை நான் மக்களுக்கு ஒரு வேண்டுகோளாக இங்கே முன்வைக்க விரும்புகின்றேன்.

இவ்வாறு பல கேள்விகளுக்கு முக்கியான பதிகளை அளித்த நபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரின் பதிகளினுடைய விரிவான ஓடியோ காணொலி எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -