அல்-ஹம்றா மகா வித்தியாலய மைதான அபிவிருத்திற்கு மேலும் நிதியினை ஒதுக்கீடு செய்து தருவதாக ஹரீஸ் வாக்குறுதி

அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன்-

லுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி இறுதிநாள் நிகழ்வு அதிபர் அஷ்ஷேக். யூ.கே. அப்துல் றஹீம் (நளீமி) தலைமையில் இன்று (16) வியாழக்கிழமை மாலை வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பதில் அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், விஷேட அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஸேக். ஏ.எல்.எம். காசிம், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல், இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, ஐ.எல். ஹமீட், ஏ.எம். றினோஸ், அக்கரைப்பற்று வலய பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் அமைப்பின் அங்கத்தவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது நீல நிற சபா, பச்சை நிற மர்வா, மஞ்சல் நிற அறபா ஆகிய இல்லங்களுக்கிடையே நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் அணிவித்து வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இவ்வில்ல விளையாட்டுப் போட்டியில் 32 தங்கம், 25 வெள்ளி, 21 வென்கலம் உள்ளிட்ட 78 மொத்த பதங்கங்களுடன் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தை மர்வா இல்லமும், 19 தங்கம், 22 வெள்ளி 25 வென்கலம் உள்ளிட்ட 66 மொத்த பதக்கங்களை பெற்று இரண்டாமிடத்தை அறபா இல்லமும், 16 தங்கம், 20 வெள்ளி, 20 வென்கலம் உள்ளிட்ட 56 மொத்த பதக்கங்களைப் பெற்று மூன்றாமிடத்தை சபா இல்லமும் பெற்றுக் கொண்டன.

குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்திற்கான சுற்றுமதில் மற்றும் பார்வையாளர் அரங்கு போன்றவற்றை அமைத்துக் கொடுத்துள்ள விளையாட்டுத்துறை பதில் அமைச்சர் ஹரீஸ் இம்மைதான அபிவிருத்திற்கு இவ்வாண்டிலும் மேலும் நிதியினை ஒதுக்கீடு செய்து தருவதாக இதன்போது வாக்குறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -