துவாரகேஸ்வரன் எனும் தனிநபரைக் கண்டித்து யாழில் போராட்டம் -படங்கள்

முகநூல் மூலமாக அச்சுறுத்துவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் என்று கூறி திரியும் வர்த்தகர் தி.துவாரகேஸ்வரனுக்கு எதிராக யாழ் பண்ணை தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து ஆர்பாட்டம் ஒன்று நேற்று (25) மாலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

'துவாரகேஸ்வரன் தனது முகநூலில் ஊடாக தமிழ் மக்களுக்கு துஸ்பிரயோகம் செய்கிறார்' எனும் தொனிப்பொருளிலேயே இவ் கண்டண ஆர்பாட்டம் இடம்பெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வைரத்தை பெற்ற தியாகராசாவே ஏன் இந்த வைரஸை பெற்றாய் கொள்ளைக்காரனே உனக்கு பேஸ்புக் எதற்கு? இதுவாரகேஸ்வரனின் பேஸ்புக்கை தடை செய் 'சரவணபவனை குறை சொல்ல உனக்கு என்ன அருகதை'  'ஊடக அமையம் உனக்கு நாடக மேடையா'  ‘ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே' ' படிக்காத எருமையே ஐக்கிய தேசியக் கட்சியின் பெயரை விக்காதே' 'சாக்கடையின் முகநூலை தடைசெய்' போன்ற பதாகைகளை தாங்கியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர்.

யாழ்.பண்ணை சந்தியிலிருந்து ஆரம்பமான இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ் பொதுநூலக வீதி வழியாக வந்து யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் முன்னால் சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டு இறுதியாக தனியார் பேருந்து நிலையத்தை அடைந்தது.

பின்னர் குறித்த வர்த்தகரது உருவ பொம்மையும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன் யாழ்ப்பாணத்து வடிவேலு என்றழைக்கப்படும் துவாரகேஸ்வரன் ஜக்கிய தேசிய கட்சியின் பெயரை கூறி செய்கின்ற வேலைகளை உரிய தரப்பினர் தடுக்க வேண்டும் என கோரி கலைந்து சென்றனர்.

குறித்த வர்த்தகரான தியாகராசா துவாரகேஸ்வரன் என்பவர் முன்னாள் அமைச்சர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -