சந்தர்ப்பம் கிடைக்கும் போது சாதித்துக் காட்ட வேண்டும் - அமைச்சர் ரமேஸ்வரன்

க.கிஷாந்தன்-
த்திய மாகாண கல்வி அமைச்சு கடந்த மூன்று வருட காலமாக எம்மிடம் இருக்கவில்லை அதனை தொடர்ந்து நான் முதலமைச்சர் ஆளுநர், ஜனாதிபதி அவர்களிடம் இதனை வலியுறுத்திய போது தமிழ் பாடசாலைகளுக்கு என்னென்ன தேவையோ அதனை இந்த மூன்று வருட காலப்பகுதியில் செய்து காட்டுமாறு இந்த கல்வி அமைச்சினை ஒப்படைத்தார்கள்.

இதற்காக என்னிடம் 6606 மில்லியன் ரூபா ஒப்படைக்கப்பட்டது. அதில் அதிக பாடசாலைகளுக்கு என்னென்ன தேவையோ 2016 ஆண்டு செய்து கொடுத்திருக்கின்றோம். இருவது பாடசாலைகளுக்கு கட்டட வசதி செய்து கொடுத்திருக்கின்றோம். அதில் ஐந்து பாடசாலைகள் முழுமையா பூர்த்தியடைந்துள்ள இன்னும் ஐந்து பாடசாலைகள் எழுபத்தைந்து வீதம் பூர்த்தியடைந்துள்ளன.

வேறு சில பாடசாலைகள் 50 வீதம் பூரத்தியடைந்துள்ளன. இரண்டு பாடசாலைகள் மாத்திரம் காணி பிரச்சினை காரணமாக தொடங்கவில்லை. கடந்த காலங்களில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கும் போது ஏனைய சமூகத்திற்கு தான் முன்னுரிமை வழங்கப்பட்டன. இன்று நாங்கள் அதனை மாற்றியுள்ளோம். நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பாடசாலைகளில் வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுத்துள்ளோம். எனது அமைச்சிலும் தொழில் வாய்ப்பு முன்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் இன்று முழுமையாக தோட்டப்பகுதியில் உள்ளவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கி வருகின்றோம்.

ஆகவே சந்தர்ப்பம் கிடைக்கும் போது சாதித்து காட்ட வேண்டும். அப்போது தான் எமது சமூகம் முன்னேறும் என மத்திய மாகாண விவசாய, நன்நீர் மின்பிடி தோட்ட உட்கட்டமைப்பு, இந்து கலாசார அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.

பொகவான தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப்போட்டி பொகவந்தலாவ பொகவான விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் பாடசாலைக்கு செல்வதென்றால் முதலமைச்சரின் அனுமதியினை பெற வேண்டும். எமது கஸ்ட்டப்பாடசாலைகள் இருக்கின்றன. அவைகள் அபிவிருத்தி செய்ய வேண்டும். எனவே அரசியல் வாதிகள் சென்றால் தான் அதனை செய்ய முடியும் என்ற நோக்கத்தோடு அனுமதியினை நான் பெற்றுக்கொடுத்தேன். ஆனால் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்களும் சென்றார்கள் வாக்குறதிகளையும் வாரி வழங்கினார்கள்.

ஆனால் இன்று எந்த பாடசாலையிலும் அவர்கள் அளித்த வாக்குறிதிகள் நிறைவேற்றவில்லை. 

மாறாக ஆசிரியர்களின் குறைகளினால் தான் பாடாலைகல்வி வீழச்சியடைந்திருப்பதாக தெரிவித்து வந்துள்ளார்கள். இதனை ஒரு பத்திரகையில் நான் வாசித்தேன் வெட்கமில்லையா? எமது பிரதேசத்தில் அதிபர் ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் தான் நாம் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளோம். கடந்த காலங்களில் ஆசிரியர் துறைக்கு சேர்த்துக்கொளள்வதற்கு எம்மிடம் தகுதியானர்வகள் இருக்கவில்லை. இன்று வடகிழக்கில் இருந்து தான் கொண்டுவரப்பட்டன. 

ஆனால் இன்று இவ்வளவு ஆசிரியர்கள் உருவாகியுள்ளோம் என்றால் அதற்கு எம் ஆசிரியர்கள் தான் காரணம் என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பிரசித்தி பெறுவதற்காக எதையாவது சொல்ல வேண்டும் என்று சொல்லக்கூடாது என்பதனை அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஆகவே எமது சமூகத்தின் முன்னேற்றம் கல்வியில் தான் இருக்கின்றன. அதற்கு என்னென தேவையோ அதனை நாங்கள் செய்து தருகிறோம். மாணவர்களின் கல்வியில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுத்தர வேண்டும் என நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

அதிபர் முத்திலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப்போட்டிக்கு அட்டன் கல்வி வலயத்தின் கோட்டக்கல்விப்பணிப்பாளர் ரெங்கசாமி, உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -