தம்புள்ளை பதற்ற நிலை தற்போது கட்டுப் பாட்டுக்குள் - அமைச்சர் ஹலீம்

பானகமுவ நிருபர்,இக்பால் அலி,
ம்புள்ளை நகரில் நேற்று ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலை தெர்டர்பாக சட்டம் ஒழங்கும் மற்றும் தெற்கு அபிவிரத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் கவனத்திற் கொண்டு வந்ததை அடுத்து தற்போது நிலைமைகள் கட்டுப் பாட்டுக்குள் வந்துள்ளதாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றம் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் ஹலீம் மேலும் தெரிவிக்கையில்:

ஒரு கடையில் நடந்த சிறிய சம்பவத்தை வைத்து சில தீய சக்திகள் பெரியளவில் பிரச்சினையை பூதகரமாக்க கலவரத்தை உண்டு பண்ண முயற்சிகள் மேற்கொள்கின்றனர். எனினும் இந்தச் சம்வம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

அதேவேளை தற்போது சுமூகமான நிலை தோன்றினாலும் நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்தவர்களின் படங்கள் சீ சீ டி. வி. கமராவில் பதிவாகியுள்ளன. இதனுடன் தொடர்பு பட்ட சந்தேக நபர்களை இனங் கண்டு உடனே கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதோடு முஸ்லிம் வர்த்தக நிலையங்களைத் திறந்து வியாபாரம் செய்வதற்குப் பாதுகாப்பு வழங்குமாறு வலியுறுத்திக் கூறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -