பஷீரை கட்சியிலிருந்து நீக்கியது தலைமை அவசரப்பட்டு எடுத்த முடிவா..?

ண்மையில் இங்கு மு.கா. தலைமை தன்னை விமர்சிக்க எத்தனிக்கும் ஒருவரை கட்சியிலிருந்து இடைநிறுத்துவதன் மூலம் தன் மீதுள்ள விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக நினைத்து இதனை செய்திருக்கலாம். இங்கு சட்ட முதுமானி சிலவேளை பிழையான முடிவை எடுத்து விட்டாரா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது.

பஷீர் தனக்கெதிராக அமைச்சர் ஹக்கீமால் எதுவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற துணிவிலேயே எல்லா செயற்பாடுகளிலும் இறங்கினார். தற்போது அவர் உயர்பீடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் இனி வரும் காலங்களில் இந்தப் பிரச்சினை மேலும் விஸ்வ௹பம் எடுக்காதா?

ஆரம்ப காலம் தொட்டு பஷீர் தன்னை ஒரு தலைவனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக எடுத்துக் கொண்டு தற்போது முதுகில் குத்தினாற் போல் நடந்து கொள்ள முற்படுவது பெரும் துரோகம் என்ற கருத்தே மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இது இஸ்லாமிய அடிப்படையில் நோக்கினாலும் தனது சகோதரனின் குறையை மறைப்பதன் மூலம் தனது குறையை இறைவன் மறைக்கிறான் என்ற நல் வாசகத்தின் படி நோக்கினாலும் இங்கு பஷீர் தவறிழைத்து வருகிறார். என்பதை தெளிவாக காட்டுகிறது.

மறுபுறம் மு.கா.தலைமையை வெறுத்தே அரசியல் ரீதியில் பல பிளவுகள் மறைந்த தலைவர் அஷ்ரபுக்கு பின்னர் ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் ஹக்கீமும் ஒரு கணம் தன்னை சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்களால் முன்வைக்கப்படுவது உண்மை.

தவறும் போது புதிய தலைமுறையினர் அரசியல் பிரவேசம் செய்வது யாராலும் தடுக்க முடியாமல் போகலாம் என்பது மக்கள் கருத்து. இது அனைத்தும் தனது அரசியல் இருப்புக்காக துடிக்கும் தலைவர்களால் ஏற்படும் கேள்வி எனவே புதிய சிந்தனையில் தலைவர்கள் பயணிக்க முன்வருவார்களா..?

ஊடகப் பிரிவு,
நாபீர் பெளண்டேசன் சிறீ லங்கா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -