எம்.ரீ.ஹைதர் அலி-
கிழக்கு மாகாணச பை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் வேண்டுகோளின் பேரில் காத்தான்குடி பிரதேசத்தில் சேதமடைந்த நிலையில் காணப்படும் வடிகான் மூடிகளை திருத்தியமைத்து புதிய மூடிகளை இடும் நடவடிக்கைகள் காத்தான்குடி நகரசபையினூடாக தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
மிகவும் சேதமடைந்த நிலையில் போக்குக்குவரத்துக்கு மிகவும் இடையூறாகவும், விபத்துக்கள் இடம் பெறக்கூடிய வகையிலும் காணப்பட்ட வாடிகன் மூடிகளை புனரமைப்பு செய்துதருமாறு பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக கடந்த 2017.01.05 திகதி பொறியியலாளர் ஷிப்லி பாறூக் காத்தான்குடி நகர சபையின் செயலாளர் S.M.M.ஸபி மற்றும் நகரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோரை அழைத்துக்கொண்டு கள விஜயமொன்றை மேற்கொண்டு சேதமடைந்த மூடிகள் சேதமைடந்த நிலையில் காணப்படும் வடிகான்களை பார்வையிட்டதோடு, இனங்காணப்பட்ட 19 இடங்களில் மிகவும் துரிதமாக இம்மாத இறுதிக்குள் சேதமடைந்த நிலையில் காணப்படும் வடிகான் மூடிகளை புனரமைப்பு செய்து புதிய முடிகளை இடுமாறும் நகர சபையின் செயலாளர் ஸபி அவர்களுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் பணிப்புரை விடுத்திருந்தார்.
அதற்கமைவாக மெத்தைப் பள்ளிவாயல் சந்தி, ஜாமியுள் ஆபிரீன் மையவாடி சந்தி, ஜாமியுள் ஆபிரீன் வீதி-பதுரியா பள்ளிவாயல் சந்தி, கடற்கரை வீதி-முஹைதீன் பள்ளிவாயல் சந்தி, மீன்பிடி இலாகா வீதி–முஹைத்தீன் பள்ளிவாயல் வீதி சந்தி, கடற்கரை வீதி–மத்திய மகா வித்தியாலய சந்தி, அல்-அமீன் வீதி–அல்-அமீன் பாடசாலை சந்தி, கர்பலா வீதி–அல்-அமீன் வீதி சந்தி, டெலிகாம் வீதி-பதுரியா சந்தி, மில்லத் பாடசாலைவீதி-வாவிக்கரை குறுக்கு வடிகான் போன்ற இடங்களில் தற்போது வடிகான் மூடிகள் புனரமைப்பு செய்யப்பட்டு புதிய மூடிகள் இடப்பட்டுள்ளதோடு தொடர்ச்சியாக இன்னும் பல்வேறு இடங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவும் உள்ளன.
நடைபெற்று முடிந்த இப்புனரமைப்பு வேலைகளை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபையின் செயலாளர் S.M.M.ஸபி, நகரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் குறித்த வடிகான் புனரமைப்பு பணிகளுக்கான கொந்துராத்து ஒப்பந்தக்காரர் ஆகியாருடன் இணைந்து 2017.02.21ஆந்திகதி - செவ்வாய்க்கிழமை பார்வையிட்டதோடு, புனரமைப்பு வேலைகள் தொடர்பான மேலதிக ஆலோசனைகளையும், பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வழங்கினார்.