தம்புள்ளையில் பதற்ற நிலை - நடந்தது என்ன.?

ம்புள்ளை நகரில் நேற்று ஏற்பட்ட அசாதாரன நிலையைத் தொடர்ந்து அங்கிருக்கும் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை மூடுமாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாக அறியக்கிடைத்தது. இந்த நிலையில் இன்று காலை பெரும்பாலான முஸ்லீம் வர்த்தகர்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் சுமார் 15 வரையான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து அவ்வர்த்தக நிலையங்களுக்கு கார் ஒன்றில் வந்துள்ள ஒரு குழுவினர் திறக்கப்பட்டுள்ள சகல முஸ்லீம் வர்த்தக நிலையயங்களையும் உடனடியாக மூடிவிடுமாறு கடும் தூசன வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தல் விடுத்து சென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து அங்கு சகல முஸ்லீம் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வந்த செய்திகள் தெரிவித்தன.

தம்புள்ளை நகருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதும் அங்கு உள்ள முஸ்லீம் வர்த்தக நிலையங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

அங்கிருந்து கிடைத்த தகவலின்படி அங்குள்ள வர்த்தக நிலையங்களை மூடிவிடுமாறு கூறி பெரும்பான்மை குழு ஒன்று வீதிக்கு இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லீம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ரெஸ்டுரண்ட் ஒன்றில் செய்த ஓடரை மாற்றி வழங்கியதாக பெரும்பான்மை பெண் ஒருவருடன் ரெஸ்டுரண்ட் ஊழியர்களுக்கு ஏற்பட்ட வாய்தர்கத்தை தொடர்ந்து அங்கு வந்த நூற்றுக்கனக்கானவர்களை கொண்ட குழுவினர் ரெஸ்டுரண்ட் முகாமையாளரை தாக்கியுள்ளதாக முதற்கட்ட தலவல்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான தாக்குதலுக்கு உள்ளான குறித்த முகாமையாளர் தற்போது தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பெரும்பான்மை வாலிபர்கள் தடி பொல்லுகளுடன் நகருக்குள் வீற்றிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தலபல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்:-

தம்புள்ளை நகரில் ஏற்பட்ட அசாதாரன நிலை தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தம்புள்ளை நகரில் ஏற்பட்டிருந்த பதட்ட நிலையை தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் நாம் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் பைருஸ் ஹாஜியார் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.

அதனை தொடர்ந்து உடனடியாக செயற்பட்ட இருவரும் பொலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்டு அங்கு ஏற்பட்டுள்ள நிலமைகளை விளக்கியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் தான் விஷேட கவனம் எடுத்து கொள்வதாக குறிப்பிட்டுள்ள பொலிஸ் மா அதிபர் குருநாகலை நகரில் இருந்து மேலதிக பொலிஸாரை தம்புள்ளைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் தேவை ஏற்படின் பொலிஸ் விஷேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்க தான் அறிவுறுத்தல் வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்று காலை வர்த்தக நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டதாக கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் பைருஸ் ஹாஜியார் ஆகியோர் குறிப்பிட்டனர்.

தம்புள்ளை நகரில் 130 க்கும் அதிகமான முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -