''இலங்கையை கட்டி எழுப்புவோம்'' விழிப்புணர்வு கூட்டம்..!

அஸீம் கிலாப்தீன்-
னுராதபுர மாவட்டத்தில் கலாவவ தேர்தல் தொகுதியில் தமுத்தேகம வேரகல பொத்த விகாரையில் நேற்று (18) காலை 9 மணிமுதல் மாலை 03.30 வரை இலங்கையை கட்டி எழுப்புவோம் எனும் தொனிபொருளில் விழிப்புணர்வு கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக் கூட்டம் விடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது இக் கூட்டத்தை கலாவ தொகுதி அமைப்பாளரும் வட மத்திய மாகான சபை எதிர்கச்சி தலைவர் அணில் ரத்நாயக அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக் கூட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சியை சேர்ந்த அங்கத்தவர்கள் மத்தியில் விடமைப்பு நிர்மாணத்துறை துறை அமைச்சர் சஜித் பிரேமதாச உரையாற்றுகையில் எமது கட்சி பல வருடங்களாக எதிர் கட்சியிலே இருந்து வந்தோம். பல தடவைகள் எமது கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது இதன் போது எமது கட்சி ஆதரவாலர்களின் வேண்டுகோளால இருந்தது மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதாகும். 20 வருடங்களாக எமது அங்கத்தவர்களின் வேண்டுகோள்கள் நிறைவேற்றபடவில்லை. 

அவர்காளின் நல நோன்பு புறக்கணிக்கப்பட்டது. இந்த சந்தர்பத்தில் எமது கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க அவர்கள் 2014ஆம் ஆண்டு முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபகக்ஷ அவர்களின் அரசியல் நிகழ்சி திட்டத்தை நன்கு அறிந்து 2௦15 ஆண்டு ஆட்சியை கைப்பற்ற சகல முன்னோடு நடவடிக்கைகளையும் 2014 ஆம் ஆண்டு திட்டம் இட்டிருந்தார். அதன்பட்டி 2015 ஆண்டு ஆட்சி கைப்பற்றபட்டது. இவ்வாறு ஒரு வெற்றி கிடைக்கும் என்று எவரும் நம்பவில்லை. நானும் கூட நம்பவில்லை இந்த வெற்றிக்கான வெகுமதி எமது தலைவர் ரணில் விக்கரம சிங்க அவர்களை மட்டுமே சாரும் நாம் பொறுப்பு எடுத்த பின்னர் பல சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டு வருகின்றது நாட்டை முன்னடுத்து செல்வதுடன் முன்னைய ஆட்சியாளர்கள் பெற்ற கடனை வட்டியோடு சேர்த்து செலுத்துவது பாரிய சவாலாக இருந்து வருகின்ன்றது என்றாலும் எமது கட்சி ஆதவாலர்களுக்கு பல தேவைகளை நிறைவேற்றுவதும் எமது பொறுப்பாகும். 

என்றாலும் உண்மையான நிலை என்ன என்பதை நாம் அறிய வேண்டும். முன்னைய ஆட்சியாளர்களின் அதிக வட்டியுடன் கூடிய கடன்களிளால் நாட்டின் உள்ள மக்களில் தலா கடன் தொகையாக 125000 ரூபாவாக இருந்தது இத் தொகை 2015இல் 500,000 இருந்தது இதனை முகாமை செய்யவது மிகவும் கஷ்டமான ஒன்றாகும். நாட்டை அபிவிருத்தி செய்வதும் மக்களுக்கு உதவி செய்வதும் நாட்டை அபிவிருத்தி செய்வதும் 20 வருடங்களில் ஏற்படுத்திய அழிவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவதும் எமது கட்சியில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதும் முக்கியமானதாகும்.

மகிந்த ராஜபக்ச ஆட்சியாளர்களினால் முன்னடுத்த செயல் திட்டங்களான மத்தள விமான நிலையம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் சூரியாவ விளையாட்டு அரங்கு போன்ற பணிகளுக்காக கோடி கணக்கான ரூபா முதலீடு செய்யப்பட்டது. அதனால் நாடுக்கு எந்த ஒரு தொழில் வாய்பை அல்லது வருமானத்தியோ பெற்று தரவில்லை மாறாக இது தோல்வியடைந்த கடன் சுமையை அதிகரித்த சில செயல் திட்டங்கள் ஆகும். இவ்வாறான பிரச்சினைக்கு மத்தியில் எமது அரசு வரச்சி நிவாரமாக பதிக்கப்பட குடும்பங்களுக்கு 1௦௦௦௦ ரூபா வழங்க உள்ளனர் முன்னைய அரசினால் இவாறான ஒரு முன் மொழிவு கூட இடம் பெரவில்லை. எனது அமைச்சினால் அதிகமான வீடுகள் நிர்மாணித்து வருகின்றோம். 2015 ஆண்டு இறுதியில் 2 கிராமங்களான கலாவ திறப்பான , 2016 ஆண்டு 22 கிராமங்களிலும் 2017 ஆண்டு 15 கிராமங்கக்க்ளில் மேல்கொள்ளபட்டு வருகிறது.

அதே போன்று பாடசாலை அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற தொனியில் பல அபிவிருத்தி நடடிக்கைகள் முன்னடுகபடுகின்ன்றது அதே போன்று சுகாதார துறை விவசாய துறை போன்ற அபிவிருத்தி திட்டங்கள் முன்னடுக்கபட்டு வருகின்றன சிறி லங்கா எயார்லைன்ஸ் நிருவாகம் முழுமையாக விழ்சி கண்டுள்ளது அதன் தொழில் புரிபவர்களின் நிலைமை கேள்வியாக உள்ளது என்று கூரி அமைச்சர் சஜித் பிரேமதாச தனது உரையில் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கிராமிய பொருளாதார அமைச்சர் P ஹரிசன் வட மேல் மகான சபை எதிர்கச்சி தலைவர் வட மத்திய மகான சபை எதிர்கச்சி தலைவர் அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -