குறிப்பாக இன்று (17) நண்பகல் 12.00 - பி.ப 3.00 மணி வரையான காலப்பகுதியில் காலி வீதி, கண்டி வீதி, ஹைலெவல் வீதி, நீர்கொழும்பு வீதி ஆகிய பாதைகளில் வாகன நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
எனவே, குறித்த காலப் பகுதியில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு, வாகன சாரதிகளுக்கு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணி, இன்று (17) பிற்பகல் 3.00 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் கூடவுள்ளதால், குறித்த காலப் பகுதியில் கொழும்பு கோட்டை பிரதேசத்தில், குறிப்பாக ஒல்கொட் வீதி, லோட்டஸ் வீதி, மருதானை வீதி, அலுத்கடை போன்ற பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார்.