தோப்பூரில் இளைஞர் மாநாடு..!

ஏ.எஸ்.எம்.தாணீஸ்,எம்.என்.எம்.புஹாரி-
தோப்பூர் பிரதேச இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் நடை பவணியும், தோப்பூர் பிரதேச இளைஞர் மாநாடும் ஞாயிற்றுக்கிழமை (05) மாலை தோப்பூர் சந்தை வளாகத்தில் நடைபெற்றது. தோப்பூர் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலிலிருந்து இளைஞர்கள் பதாகைகளை ஏந்தியவாறு சந்தை கட்டிட தொகுதியை வந்தடைந்ததன் பின் மாநாடு ஆரம்பமானது. அத்தோடு பிரதேச இளைஞர்களாகிய நாம் எதிர் காலத்தில் அரசியல் விடயங்களில் ஒற்றுமையாக செயற்படுவோமெனவும் சத்திய பிரமானம் செய்து கொண்டனர்.

தோப்பூர் இளைஞர் மாநாடு ஏற்பாடு செய்தமைக்கான நோக்கம் குறித்து தோப்பூர் இளைஞர் பேரவையின் செயற்குழு உறுப்பினர் எச்.என்.எம்.ஜாரிக் கருத்து தெரிவிக்கும் போது - தோப்பூர் பிரதேசம் என்பது பழமையான பிரதேசமாகும் இலங்கையின் சுதந்திரத்திற்காக வெள்ளையர்களுக்கு எதிராக நாட்டு பற்றோடு போராடிய சேகுதீதி எனும் மாமனிதர் பிறந்த மண்ணாகும் அவ்வாறு வரலாற்றை கொண்ட இப்பிரதேசத்தை அரசியல் வாதிகள் அபிவிருத்தி விடயத்தில் கவனத்தில் கொள்வதில்லை.இதனால் இப்பிரதேசம் அபிவிருத்தியில் பின்தங்கி காணப்படுகின்றது.இதற்கு அரசியல் வாதிகள் கூறுகின்ற காரணம் உங்களது பிரதேசம் அரசியல் ரீதியாக பிளவுபட்டு காணப்படுகின்றது இதனால் எங்களுக்கு அபிவிருத்தி செய்வது கடினம் என்பதாகும்.

அதனால்தான் நாங்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால் 1000 க்கும் அதிகமான இளைஞர்களை ஒன்று திரட்டி மாநாட்டினை நடாத்தி தோப்பூர் பிரதேசத்தின் தேவைகளை உள்ளடக்கிய தோப்பூர் பிரகடனம் ஒன்றினை வெளியிட்டோம்.

இந்த தோப்பூர் பிரகடனம் திருகோணமலை மாவட்ட அரசியல்வாதிகளுக்கு ஆவணமாக கையளிக்க உள்ளோம்.இதனை இவ் அரசியல்வாதிகள் குறிப்பிட்ட காலத்திற்குல் நிவர்த்தி செய்து தர வேண்டும்.அவ்வாறு இதனை கவனத்தில் எடுக்காது இருப்பார்களாக எதிர்வரும் தேர்தல்களில் தோப்பூர் பிரதேச இளைஞர்கள் திருகோணமலை மாவட்ட அரசியல்வாதிகளுக்கு சரியான பாடத்தை புகட்டுவார்கள் எனவும் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -