கல்குடா விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்..!

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
ன்று செவ்வாய்க்கிழமை 14.02.2017 ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்னாள் கல்குடா விவசாய அமைப்புக்களும், விவசாயிகளும் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக இடம் பெற்றதை அவதானிக்க கூடியதாக இருந்தது. மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தேர்தல் தொகுதி கோறளைப்பற்று வாழைச்சேனை, கோறளைப்பற்று தெற்கு கிரான், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை, கோறளைப்பற்று வடக்கு வாகரை ஆகிய பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் உட்பட்ட கல்குடா தொகுதி விவசாய சமூகமானது எதிர்கொள்ளும் அறுவடை செய்யப்பட்ட நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயத்தினை வலியுறுத்தியும், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை கொள்வனவு செய்வதில் இருக்கின்ற தாமதங்கள் நிவர்த்தி செய்து தருமாறும் கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

மேலும் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் முக்கிய நிகழ்வாக விவாசய சங்கங்களின் ஒருமித்த கோரிக்கை அடங்கலான மகஜர்கள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதுடன் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் நெளபல் குறித்த பிரச்சனை சம்பந்தமாக மாவட்ட செயலகம் மற்றும் கொழுபிலுள்ள உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி மிக விரைவில் விவசாயிகளுகான தீர்வினை பெற்றுத்தருவதாக உத்தரவாதமளித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -