காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் நிலை கவலைக்கிடம் - சம்மந்தனிடம் எடுத்துரைப்பு

அம்பாறை மாவட்டத்தில் சில பிரதேசசெயலகப்பிரிவுகளில் முன்னாள் போராளிகளுக்கான வீட்டுவசதி உள்ளிட்ட உதவிகளை வழங்குவதில் பாரபட்சம் அல்லது அசமந்தப்போக்கு காணப்படுகின்றது.காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. இதுவிடயங்களில் தலையிட்டு ஆவனசெய்யவேண்டும்.

இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா ஆகியோரை த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியபோது தெரிவித்தார். அவர் அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் எதிர்நோக்கும் சமகாலப்பிரச்சினைகள் தொடர்பாக தரவுகளுடன் எடுத்துரைத்தார்.

அவர் அங்கு தெரிவிக்கையில்

நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் அளப்பெரிய பங்களிப்பை வழங்கிய தமிழ்மக்கள் குறிப்பாக அம்பாறைமாவட்ட தமிழ்மக்கள் குறைந்த பட்ச நலன்களையாவது பெறுவதில் பல சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன. ஒருசில வேற்றின அதிகாரிகளது பொடுபோக்குத்தனமே இதற்கு அடிப்படைக்காரணமாகும்.

குறிப்பாக இறக்காமம் சம்மாந்துறை பிரதேச செயலாளர்களது பாரபட்ச செயற்பாடுகள் எமக்கு சந்தேகத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்துகின்றது.சமுக அரசியல் பொருளாதார காணிப்பிரச்சினை மக்களுக்கான வாழ்வாதாரப்பிரச்சினைகள் சமுர்த்தி வழங்கலிலுள்ள பிரச்சினைகள் மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் பற்றி எடுத்துக்கூறினார்.

கடந்த 30வருடகாலமாக இழுத்தடிக்கப்பட்டுவரும் கல்முனை தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரம் கல்முனை நகர புதிய அபிவிருத்தித்திட்டம் தமிழ்மக்களின் அபிலாசைகளைப்பெறாமல் தன்னிச்சையாக மேற்கொள்ள எத்தனிக்கும் விவகாரம் 20வருடகாலமாக மண்ணுக்குள்ளேயே கிடக்கும் கல்முனை தமிழர் கலாசார மண்டப நிருமாணவேலைகள் பாரிய 4000ஏக்கர் வட்டமடு பிரச்சினை தமிழ்விவசாயிகளின் தொட்டாச்சுருங்கிவட்டை பிரச்சினை மற்றும் நியாயமான கல்முனை தமிழ்வலயமொன்றின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். 

மேலும் கிழக்கு முதலமைச்சர் 4ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கவுள்ளதாக கூறுகின்றார்.நல்லது. கடந்தகாலத்தில் வேலைவாய்ப்பு அபிவிருத்தி பதவியுயர்வு நியமனம் போன்ற விடயங்களில் அவர் எப்படி நடந்துகொண்டார் என்பதை நாமறிவோம். அதனால்தான் சந்தேகம் எழுகின்றது.எனவே த.தே.கூட்டமைப்பும் பங்காளியாக இருக்கின்ற கிழக்குமாகாணசபையில் வழங்கப்படுகின்ற அனைத்தும் விகிதாரசார அடிப்படையில் வழங்கப்படுவதை தலைமைகள் உறுதிசெய்யவேண்டும். 

கிழக்குமாகாணத்திலிருக்கக்கூடிய மற்றும் அம்பாறையிலிருக்கக்கூடிய எமது கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தமக்கிடையே பரஸ்பரம் புரிந்துணர்வுடனும் அந்தந்த பிரதேச அமைப்பாளர்களோடு இணைந்தும் செயலாற்ற வகைசெய்யவேண்டும்.என்று கேட்டுக்கொண்டார்.
உரியவர்களோடு கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் பதிலளித்தனர்.மாவைசேனாதிராஜாவினது உடல்நலம் குறித்தும் பேசப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -