பல குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலும் மாநாட்டிற்கு தயாராகும் கல்குடா..!

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் முன்னாள் அமைச்சர் பசீர் சேகு தாவூத் கட்சியின் தலைமையான அப்துர் ரவூப் ஹிபத்துல் ஹக்கீமீற்கு எதிராக ஆதாரங்களை வெளியிடப்போவதாக சுமத்தியுள்ள குற்றச்சாட்டானது சமகாலத்தில் முஸ்லிம் காங்கிரசிற்குள் மட்டுமல்லாது தேசிய, சர்வதேச முஸ்லிம் சமூதாயத்திற்குள் முக்கிய சமூக பிரச்சனையாகவும், ஏனைய சமூகங்களின் வாத பிரதி வாதங்களுக்குள்ளான பேசும் பொருளாக மாறியுள்ள முக்கிய விடயமாக எல்லோராலும் பார்க்கப்படுகின்றது.

இந்த சூட்டோடு வருகின்ற 12ம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாட்டிற்கு கல்குடா பிரதேசத்திலிருந்து எவ்வாறான ஆதரவினை கட்சிக்கும், கட்சியின் தலைமைக்கும் கொடுத்து கட்சியினை மேலும் பலப்படுத்துவது சம்பந்தமான ஒன்று கூடல் இன்று 08.02..2017 முஹாஜிரீன் ஆசிரியரின் வீட்டில் கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் உயர் பீட உறுப்பினருமான எச்.எம்.எம்.றியாழினுடைய பூரண அனுசரணையுடனும், வழிகாட்டல்களுடனும் வை.எஸ்.ஓ.ஹனீபாவின் தலைமையில் கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு கூடி ஆராய்ந்து பேராளர் மாநாட்டில் கலந்து கொள்வது சம்பந்தமான பல முடிவுகளை எடுத்திருந்தது. 

அத்தோடு கட்சியின் தலைமைக்கும், கட்சிக்கும் சில நாட்களுக்கு முன்னர் அபகீர்த்தியினை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் வாயிலால பல ஆதரங்களை வெளியிடபோவதாக குற்றம் சுமத்தியுள்ள கட்சியின் தவிசாளர் பசீர் சேகு தாவூத்திற்கு எதிராக பேராளர் மாநாட்டில் பகிரங்க எதிர்ப்பினை கல்குடா சார்பாக தெரிவிக்க உள்ளதாக முடிவெடுக்கப்பட்ட விடயம் முக்கிய கருப்பொருளாக ஒன்று கூடலில் பார்க்கப்பட்டது. பேராளர் மாநாடு சம்பந்தமாக கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய விடுத்துள்ள அறிக்கையின் காணொளி எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -