"கிழக்கில் பட்டதாரிகள் வேலையில்லா தின்டாட்டம்" தீர்வு கிட்டியது

ஏ.எல்.எம் நஸீர்
அபு அலா -
டந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆண்டு வரையான காலப் பகுதியில் பட்டங்களை முடித்துவிட்டு வேலையில்லாமல் பல வருடங்களாக 4500 பட்டதாரிகள் தின்டாடி வருவதாக கிழக்கு மாகாண பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஜெஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகள் பல வருடங்களாக எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரிடம் சுகாதார அமைச்சில் நேற்று மாலை (15) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

எங்களின் பராமரிப்புக்குக் கீழ் தாய், தந்தையர்கள் இருக்கவேண்டியவர்களின் நிலைமை மாறி நாங்கள் அவர்களின் பராமரிப்புக்குக் கீழ் இன்று வரையும் இருப்பதை என்னி நாங்கள் மனவேதனையடைகின்றோம். அந்தளவுக்கு இன்றைய நல்லாட்சி அரசி எங்களை புரம் தள்ளியுள்ளது.  இந்த நல்லாட்சியரசு வந்தால் எங்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்கும் என்றென்னி நாங்கள் மிகவும் பாடுபட்டவர்கள் என்பதை இந்த அரசு நல்லாட்சியரவு எங்களை மறந்துவிட்டு புறம்தள்ளி செயற்பட்டு வருவதை என்னி வெட்கப்படுகின்றோம். இந்த அரசை கொண்டுவருவதற்காக நாங்கள் பாடுபட்டது எங்களின் தவறா? என்ற கேள்வியையும் எழுப்பிப் பேசினார்.

இதுதொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் பதிலலிக்கையில்,

இந்த நல்லாட்சியரசி யாரையும் மறக்கவும் இல்லை, புறம்தள்ளி செயற்படவுமில்லை நீங்கள் அவ்வாறு நினைத்து செயற்படுவது தவறாகும். நல்லாட்சியரசி பதவியெற்ற காலத்திலிருந்து இன்றுவரைக்கும் பட்டதாரிகளுக்கான நியமனங்களையும், அதிபர்கள் நியமனங்களையும் வழங்கி வருகின்றது. இவ்வாறு வழங்கி வைக்கப்படுகின்ற நியமனங்கள் யாவும் அவரவர்களின் நிலைமைகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகின்றன. உங்களுக்கான நியமனங்கள் மிக விரைவில் கிடைக்கும் அதுவரை சற்று பொறுத்திருங்கள் என்றார்.

அதுமாத்திரமல்லாமல் கடந்த வருடம் நடந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பரீட்சையில் 40 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகள் பெற்று சித்தியடைந்து நேர்முகப் பரீட்சையில் தெரிவான 222 ஆசிரியர்களுக்கான நியமனங்களும் நாளை வெள்ளிக்கிழமை (17) வழங்கி வைக்கப்படவுள்ளன. (தொடர்புடைய செய்திக்கு)

இதில் தழிழ்மொழி மூல ஆசிரியர்கள் 164 பேருக்கும், சிங்கள மொழி மூல ஆசிரியர்கள் 58 பேருக்கும் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன. இவ்வாறு செய்துவருகின்ற இந்த நல்லாட்சியரசை நீங்கள் குறை சொல்லி பிழையாக என்னிவிடவேண்டாம். அதுமாத்திரமல்லாமல் அண்மையில் வெளி மாகாணங்களுக்கு ஆசிரியர் நியமனங்களைப் பெற்ற கிழக்கு மாகாண ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்துக்கே மாற்றித்தரவேண்டும் என்று எமது கிழக்கு மாகாண முதல்வர் பட்டபாடுகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நான் நினைக்கின்றேன் என்றும் கூறினார்.

குறித்த ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பில் ஆளுநர் ஒஸ்டின் பெணான்டோவை அலைபேசி வாயிலாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் தொடர்புகொண்டு பேசியதுடன் ஆளுநரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் பெற்றுக்கொடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -