இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் விளையாடுகிறது.
இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கில் நடைபெறுகின்றது.
தென்னாபிரிக்க அணியுடனான தொடரை முடித்துக் கொண்டு இலங்கைக்கு திரும்பாமல் அங்கிருந்து அவுஸ்திரேலியா சென்றடைந்தது இலங்கை அணி.
பெரும் நம்பிக்கையுடன் இருக்கும் இளம் இலங்கை அணி, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடரை நிச்சயம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
காரணம் தென்னாபிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி, இருபதுக்கு 20 தொடரை மாத்திரம் வென்றெடுத்தது.
அதேபோல் இலங்கை அணியில் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இணைக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உபுல் தரங்க தலைமையிலான அணி பயிற்சிப் போட்டியிலும் வெற்றிபெற்றிருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை அணி சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.(வீ)