ஐ. ஏ.காதிர் கான்-
குளியாப்பிட்டியவில் இருந்து அழுத்கமை வரையிலான புதிய இ.போ.ச. பஸ் சேவையொன்று திவுலப்பிட்டிய இ.போ.ச.டிப்போவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 5.30 மணிக்கு குளியாப்பிட்டிய நகரிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் இந்த பஸ் வண்டி, முற்பகல் 11.30 மணிக்கு அழுத்கமை நகரைச் சென்றடையும். மீண்டும் அழுத்கமையிலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு, குளியாப்பிட்டியவை இரவு 8.30 மணிக்கு வந்து சேரும்.
குளியாப்பிட்டியவிலிருந்து பன்னல, படல்கம, திவுலப்பிட்டிய, மினுவாங்கொடை, கம்பஹா, கடுவெல, பத்தரமுல்ல, பிட்டகோட்டே, நுகேகொடை, களுபோவில, தெஹிவளை ஊடாக காலி வீதியை அடைந்து அழுத்கமையைச் சென்றடையும் இந்த பஸ் வண்டி, மீண்டும் இதே வழியாக குளியாப்பிட்டிய நோக்கிப் பயணமாகும். இந்த பஸ் பயணத்திற்கான ஒரு வழிக் கட்டணமாக 160 ரூபா அறவிடப்படுவதாக, திவுலப்பிட்டிய டிப்போ முகாமையாளர் எச்.பீ.அனுர சாந்த குமார தெரிவித்தார்.