நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன்-
காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் டிக்கோயா ஆறு பாலாறாக காட்சியளிப்பதுடன் துர்நாற்றம் வீசூவதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்
டிக்கோயா ஆறானது தரவளை பகுதியிலிருந்து சுமார் இரண்டு கிலோ மிட்டர் வரை பாலாறாக காற்சியளிக்கின்றது
டிக்கோயா தரவளை பகுதியில் இயங்கும் பால்சேகரிப்பு நிலையத்திலிருந்த பாலே ஆற்றில் கலந்திருப்பதாக தெரியவருகின்றது
சம்பவம் தொடர்பில் குறித்த பால் சேகரிப்பு நிலைய அதிகாரிகளிடம் கேட்ட போது பால் சேகரித்து வைத்திருந்த 5 ஆயிரம் லீட்டர் பால் தாங்கி தவறி வீழ்த்து பால் கொட்டியதாக தெரிவிக்கின்றனர் எனினும் 17.02.2017 அதிகாலை
பழுதடைந்த நிலையிருந்த சுமார் 10 ஆயிரம் லீட்டர் வரையிலான பாலை பால் சேகரிப்பு நிலையத்தினரே ஆற்றில் ஊற்றியுள்ளதாகவும் ஆற்றுப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் காசல்ரீ நீர்தேக்கதின் நீர்மாசடைவதாகவும் பிரதேசமக்கள் தெரிவிக்கான்றனர்